//]]>3

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

தமிழ்ச் சிறுமியான சுட்ட மூவருக்கும் ஆயுள்தண்டனை



பிரிட்டன், லண்டனில் தமிழ்ச் சிறுமி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்ட மூன்று குற்றவாளிகளுக்கும் நீதிமன்றம் நேற்று ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தெற்கு லண்டனில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொள்ளையடிப்பதற்காக புகுந்த மூவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துசா கமலேஸ்வரன் என்ற சிறுமி நெஞ்சில் படுகாயமடைந்தார்.
இதனால் அவர் உடல் செயலிழந்த நிலையில் தற்போது சக்கர நாற்காலியில் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிறுமி சுடப்பட்ட காட்சி வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெராவில் பதிவானது.
இதையடுத்து குற்றவாளிகள் மூவரையும் கைது செய்த பிரித்தானியக் காவல்துறையினர், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது.
குற்றவாளிகளில் ஒருவர் குறைந்தது 17 ஆண்டுகளும், ஏனைய இருவர் குறைந்தது 14 ஆண்டுகளும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இதனை சமூகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள மூவரும் 19, 20, 21 வயதுகளையுடைய கறுப்பினத்தவர்களாவர்.
இந்தச் சம்பவத்தின் போது வர்த்தக நிலைய உரிமையாளரான றொசான் செல்வக்குமாரின் தலையிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
அவரது தலையில் இருந்து அந்தக் குண்டு இன்னமும் அகற்ற முடியாதுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்ப்புக் குறித்து சிறுமி துசாவின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக