//]]>3

புதன், 16 மே, 2012

ஆலயத்தில் பிரசன்னா-சினேகா



திரையுலக நட்சத்திரங்களான நடிகர் பிரசன்னா- சினேகா ஆகியோரது திருமணம் கடந்த 11-ந்தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பிரசன்னாவுக்கு கரூர் மாவட்டம் மகாதானபுரம் அருகே உள்ள பொய்யாமணி கிராமம் பூர்வீகமாகும். இவரது தாய் வழி குலதெய்வ கோவிலான செல்லாண்டி அம்மன் கோவில் மாயனூரில் மதுக்கரை காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் நடிகர் பிரசன்னா குலதெய்வ கோவிலுக்கு வந்து செல் வதை வழக்கமாக கொண்டி ருந்தார்.

தற்போது திருமணம் முடிந்த கையோடு இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பிரசன்னா, தனது பெற்றோர், சகோதரர் மற்றும் மனைவி சினேகாவுடன் கோவிலுக்கு வந்தார்.

மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலிலும் அவர்கள் தரிசனம் செய்தனர்.

இதையடுத்து தாந்தோணி மலையில் உள்ள தனது நண்பர் வெங்கடகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார். பின்னர் அவர்கள் காரில் சென்னை புறப்பட்டு சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக