//]]>3

புதன், 16 மே, 2012

பறக்கும் சோளன்


முதன் முறையாக இலங்கையிலிருந்து உலக நாடுகளுக்கு சோளம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் முதற்கட்டமாக ஆயிரம் மெற்றிக் தொன் சோளம் எதிர்வரும் 22ம் திகதி ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இதனை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உத்தியோகபூர்வ நிகழ்வினை தலைமைதாங்கி 22ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைப்பார்.
இதன் போது விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் றசாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்றுமதியின் முதற்கட்டமாக கனடா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு 1000 மெற்றிக் தொன் சோளம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. அத்துடன் ஒரு வருடத்திற்கு 10 ஆயிரம் மெற்றிக் தொன் சோளத்தினை ஏற்றுமதி செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவரகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக