//]]>3

புதன், 16 மே, 2012

கற்பளிப்பு ஆனது விஞ்ஞான ரீதியில் தவறாகுமா? சுவாரஸ்யமான அலசல்!



கற்பளிப்பு என்பது என்ன…? பெண்ணுடனோ அல்லது ஆணுடனோ அவர்களின் விருப்பமின்றி உடல் ரீதியாக புணர்தலை குறிக்கிறது.
உலகில் மனிதன் தொடங்கி அனைத்து உயிரினங்களும் பாலியல் உணர்வுகள் உள்ளவையாகவே காணப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. காரணம் பால் உணர்வே அவ் உயிரினத்தின் இனத்தை பெருக்கி, பூமியில் அவ் உயிரினம் நிலைத்திருக்க வழி செய்வதாகும்.
அனைத்து விலங்குகளும் பிறக்கையில் அவற்றின் ஜீன்களில் இனப்பெருக்கமானது ஓர் கடமையாகவே இயற்கையால் பொறிக்கப்படுகிறது என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை.
கரப்பான் பூச்சியினம், உலகின் பண்டைய ஓர் இனமாகும், மனிதன் தோன்றுவதற்கு பல கோடி வருடங்களுக்கு முன்பிருந்தே அவை பூமியில் வசித்து வருகின்றன.
காரணம் அவற்றின் சிறப்பான இனப்பெருக்க முறையே ஆகும்.
புவியில் பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் தட்ப வெப்ப மாற்றங்களில் இருந்து தப்பித்து இன்னமும் கரப்பான் பூச்சிகள் இப் பூமியில் வாழ்ந்து வருவதற்கு அவை அவற்றின் ஜீன்களில் பொறிக்கப்பட்ட இனப்பெருக்க கடமையை சரிவர நிறைவேற்றியதாலேயே ஆகும்.
மனிதனும் ஏனையவை போல் ஓர் விலங்கே. அவனது ஜீன்களிலும் இனப்பெருக்கம் என்பது கடமையாக பொறிக்கப்பட்டுள்ளது.
அக் கடமை மீது அதீத கடமைஉணர்ச்சியோடு செயற்படுபவர்களையே சமூகம் காமுகர்கள் என்கிறது. அத்துடன் அவர்களின் இக் கடமை உணர்ச்சியே கற்பளிப்பு என்ற செயன்முறைக்கும் தூண்டுகிறது.
எனவே விஞ்ஞான ரீதியில் கற்பளிப்பு தவறில்லை என்று கருதலாம். கடமையை செய்வது தவறாகுமா???
ஆனால் மனிதன் விலங்கு என்ற பதத்தை கடந்து ”சமுதாய விலங்கு” என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறான். காரணம் மனிதன் சமூகம் சார்ந்து, அனைத்து மனிதர்களுக்கும் சம பலம் கிடைக்குமாறு சட்ட திட்டங்கள் வகுத்து வாழ்கிறான்.

சமூக கட்டமைப்பு காணப்படாவிடின், பூமியில் ஏனைய விலங்கினங்களுக்கு எழுதப்படாத சட்டமாக உள்ள ” பலமானவை வாழும், பலமற்றவை அழிந்து போகும்” என்பதற்கிணங்க, உடல் வலிமையற்ற மனிதர்கள் அழிவை நாடவேண்டி இருந்திருக்கும்.
எனவே சமூக நோக்கில் பார்த்தால், மனிதன் இயற்கை கடமைகளை கட்டுப்படுத்தி, ஒழுக்க விதிமுறைகளுக்கு அமைய வாழ்தல் இன்றியமையாதது ஆகிறது…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக