//]]>3

வியாழன், 7 ஜூன், 2012

பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை



பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட நாளுக்கான சம்பள பணத்தை வழங்காதிருக்க உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இத்தகவலை உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதும் அவர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய பிரச்சினையை பணி நிறுத்தம் செய்து தீர்க்க முடியாது என உயர்கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சம்பளப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நேற்று (06.06.2012) தொடக்கம் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »