//]]>3

சனி, 26 மே, 2012

நந்திக்கடல் ஆக்கிரமிப்புத் தோல்வி



முல்லைத்தீவு மாவட்டம், நந்திக்கடல் பகுதியில் சுதந்திரக் கட்சி சார்ந்த நபரொருவர் அனுமதியின்றி இறால் வளர்ப்புக்கென சுமார் 4ஏக்கர் நிலப்பகுதியை ஆக்கிரமிக்க மேற்கொண்டிருந்த முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால்,தோல்வியில் முடிந்திருக்கின்றது.
இந்தவிடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த 14ம் திகதி குறித்த பகுதியில் முகாமிட்ட குறித்த நபரொருவர், கரைதுறைப்பற்று பிரதேச செயலரினால் வழங்கப்பட்ட கடிதமொன்றை வைத்துக் கொண்டு குறித்த பகுதியை ஆக்கிரமித்துள்ளார்.
மேலும் தன்னையொரு சுதந்திரக்கட்சி உறுப்பினர் எனவும். அதற்கான அனுமதி தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தே, அப்பகுதியை கனரக வாகனங்களைக் கொண்டு தோண்டி அணைகளையும் அமைத்துள்ளார்.
இதனையடுத்து பிரதேச மக்களும், நந்திக்கடலை அடிப்படை வாழ்வாதாரத் தொழிலாக கொண்டுள்ள மக்களும் ஒன்று திரண்டு தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
எனினும், அதற்கு குறித்த நபர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன், அமைச்சர் ஒருவரின் இணைப்பாளர்கள் சிலரையும் அந்த இடத்திற்கு வரவழைத்து, பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர்.
அதனையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விடயமறிந்து அங்குவந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதுடன், குறித்த திட்டத்திற்கு உடனடித் தடையினையும் விதித்திருக்கின்றனர்.எனினும் அமைக்கப்பட்ட அணைக்கட்டு இன்னமும் அகற்றப்படவில்லை என பிரதேச மக்கள் தொடர்ந்தும் குற்றம்சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக