//]]>3

சனி, 26 மே, 2012

மீண்டும் தலைவராக சம்மந்தன்




கடுமையான எதிர்ப்பு மற்றும் கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில், இலங்கை தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு நாளை நடைபெறுவதற்கு முன்னோடியாக இன்று காலை 9.45 மணியளவில், பொதுச் சபைக் கூட்டம் கட்சியின் தலைவர் இராசம்பந்தன் தலைமையில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு ஆரம்பமானது.

நேற்று மாலை பழைய செயற்குழுவுக்கான கூட்டம் மட்டக்களப்பு ஊறணியில் உள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில், நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பொதுச்சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இன்றைய கூட்டத்தில், தமிழரசுக்கட்சியின் அனைத்து கிளைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் கிளைகளின் தலைவர்கள் செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

பொதுச் சபைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, நிருவாகச் செயலாளர் குகநாதன், பொருளாளர் எஸ்ரி.ஆர்.தியாகராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, சிவஞானம் ஸ்ரீதரன், சரவணபவான், பா.அரியநேத்திரன், சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கனகசபை, திருகோணமலை துரைரெட்ணசிங்கம், துரைராஜசிங்கம், ஜனாப் கே.எம்.இமாம், கொழும்புக்கிளை தலைவர் சட்டத்தரணி கே.வி.தவராசா, செயலாளர் சு.வித்தியாதரன் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


இன்றைய பொதுச் சபைக் கூட்டத்தில், புதிய தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேசிய மாநாட்டத் தீர்மானங்கள் தொடர்பிலும் இறுதித் தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக