தெஹிவளை, கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருல் ரஹ்மான் பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து நேற்று ஆப்பாட்டம் ஒன்று இடமபெற்றுள்ளது. இந்த ஆப்பாட்டத்தில் பெரும்பாலான பௌத்த பிக்குகளும் சிங்களவர்களும் கலந்து கொண்டனர்.ஜாமியுஷ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா, பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா என முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பதினைந்து வருடங்களாக இவ்விடத்தில் இயங்கி வருகின்றன.
கடந்த சில வாரங்களாக குறித்த கட்டடம் புனரமைப்பு வேலைகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, இந்த பள்ளிவாயலின் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறைப்பாடு ஒன்று கல்விஹார பிக்குகளால் தெஹிவளை – கல்கிசை மேயரிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் நேற்று (25) மாலை முச்சக்கர வண்டிகளில் வந்த இனந்தெரியாத கோஷ்டி ஒன்று மதரசா மீது கற்களை வீசிவிட்டுச் சென்றிருந்தது.
பின்னர் பிற்பகல் 4:00 மணியளவில் கல்விஹாரவில் இருந்து பிக்குமார் மற்றும் பொதுமக்களைக் கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று புறப்பட்டு மத்ரசாவைத் தாண்டி மிருகக்காட்சி வீதி சந்திக்கு வந்து சேர்ந்தது. அதில் கலந்து கொண்டோர் மதரசாவை அங்கிருந்து அகற்றுமாறு கோஷமிட்டதுடன் சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக