மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்புக்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் 27ம் திகதி மன்னாரில் மக்கள் ஒன்று கூடல் ஒன்று இடம்பெறவுள்ளது.இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ள ஐந்து ஆயர்களுக்கு மன்னார் நீதிமன்றம் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகும்படி அழைப்பு விடுத்துள்ளது.
மன்னார் பொலிஸார் செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் தலைமன்னார், முருங்கன், வன்கலாய் மற்றும் மடு ஆகிய கிறிஸ்தவ ஆலய ஆயர்களுக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்று கூடலின்போது ஏற்படலாம் என கருதப்படும் போக்குவரத்து நெரிசல், அமைதிக்கு பங்கம், தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு இடையில் இன முறுகல்,மற்றும் அமைச்சர் ஒருவரின் உருவ பொம்மை எரிப்பு போன்ற விடயங்களை முன்வைத்து பொலிஸார் இந்த முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆனால் தெய்வ பிரார்த்தனையின் நிமித்தம் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிறிஸ்தவ சமுகம் தெரிவித்துள்ளது.இவர்கள் எந்தவொரு பேரணியையோ ஆர்பாட்டத்தையோ நடத்த ஏற்பாடு செய்யவில்லை.இந்த ஒன்று கூடலுக்கு அரச ஊடகத்தின் பரிவு உள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக