//]]>3

திங்கள், 16 ஏப்ரல், 2012

10ஆக சுருங்கியது இந்திய எம்பிக்கள் தொகை



இலங்கைக்கு வரும் இந்திய எம்.பிக்கள் குழு மேலும் பலவீனமாகியுள்ளது. இக்குழுவிலிருந்து தற்போது திரினமூல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகியவையும் வெளியேறி விட்டன. இதனால் குழுவின் எண்ணிக்கை 10 ஆக சுருங்கிப் போய் விட்டது. 

சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை வரவுள்ளது. இந்தக் குழுவிலிருந்து ஏற்கனவே அதிமுக, திமுக ஆகியவை வெளியேறி விட்டன. இதனால் குழுவின் எண்ணிக்கை 14 என்பதிலிருந்து 12 ஆக குறைந்து விட்டது. 

இந்த நிலையில் திரினமூல் காங்கிரஸும், ஐக்கிய ஜனதாதளமும் இன்று விலகி விட்டன. திரினமூல் சார்பில் சுசாரு ரஞ்சன் ஹல்தாரும், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் சிவானந்த திவாரியும் வருவதாக இருந்தது. ஆனால் இருவரும் போகவில்லை. இதனால் குழுவின் எண்ணிக்கை தற்போது 10 ஆக சுருங்கிப் போய் விட்டது. 

இந்த பத்துப் பேரில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. மற்றவர்கள் வட மாநில எம்.பிக்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக