மட்டக்களப்பு நகரின் கோவில் வீதியில் உள்ள ஐ.நாவின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பான பொறியியலாளரின் வீட்டின் மீது நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் ஐ.நாவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பு வாய்ந்த அதிகாரியாகப் பணியாற்றும் இளங்கோவன் காண்டீபன் என்ற பொறியியலாளரின் வீட்டின் மீதே நேற்று இரவு 7.45 மணியளவில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் வீட்டின் கதவுகள், யன்னல்கள் உடைந்து சேதமாகின. எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக