//]]>3

திங்கள், 16 ஏப்ரல், 2012

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீள்குடியேற்றம் குறித்து அரச அதிபருடன் ஆலோசனை




யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களது தேவைகள் குறைபாடுகள் மற்றும் நிவாரண வழங்கல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆய்வு ரீதியிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (16) யாழ் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.




பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது இன்னமும் மீளக் குடியேற்றம் மேற்கொள்ளப்படாத பகுதிகள் குறித்தும் பாவனைக்கு விடப்படாத தனியார் மற்றும் பொதுக் கட்டிடங்கள் வீடுகள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வழங்கப்படாதிருக்கும் நிவாரணங்கள் தொடர்பிலும் கவனஞ் செலுத்தப்பட்டது.





இக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் யாழ் மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக