//]]>3

புதன், 30 மே, 2012

44,000 அகதிகள் யாழ்ப்பாணத்தில் மட்டும்


புலம் பெயர்ந்தோர் சேவை அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி யாழ்ப்பாணம் வளைகுடாப்பகுதியில் மட்டும் 44,559 பேர் அகதிகளாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் போரின் காரணமாக குடும்பத்தினரை இழந்து 53 முகாம்களிலும் வேறு சில நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இவற்றில் பலர் போரால் பாதிக்கபட்ட சேதமடைந்த ரெயில் நிலையங்களில் தஞ்சமடைந்திருந்தனர்.
 ஆனால் தற்போது மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கப்படுகிறது என்று கூறி அங்கிருந்தும் அகதிகள் விரட்டியடிக்கப்படுவதாக ஆதாரபூர்வ தகவல்கள் தெரிக்கின்றன. இது தவிர உயர்பாதுகாப்பு வளையம் வடக்கு வலிகாமம் பகுதியில் மீண்டும் குடியேறுவதற்காக சுமார் 32,000 பேர் காத்திருக்கின்றனர்.
 45 கிராமப் பகுதிகளில் வலிகாமம் வடக்குப் பகுதியில் சுமார் 20 கிராமங்களில் மட்டுமே இதுவரை மீண்டும் குடியமர்த்தப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 25 கிராமங்களில் 9 கிராமங்களில் ஒரு பகுதியில் மட்டும் குடியேற்றப்படுவது நடந்து கொண்டிருக்கிறது.
 யாழ்ப்பாணத்தில் மட்டும் சுமார் 44,000 பேர் அகதிகளாக உள்ளது அங்குள்ள மோசமான நிலையை உணர்த்துகையில் இந்தியாவிலிருந்து சென்ற எம்.பி.க்கள் குழுவிற்கு இவையெல்லாம் கண்ணில் தென் படாமல் போனது ஆச்சரியமா? அயோக்கியத்தனமா என்பது புரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக