//]]>3

புதன், 30 மே, 2012

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக விவசாயி அறிவிப்பு



தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கொளாநல்லி குட்டப்பாளையத்தில் தங்கவேல்(வயது 53) என்ற விவசாயி வசிக்கின்றார்.
இவர் இதுவரை 3 முறை மொடக்குறிச்சி சட்டசபை தேர்தலிலும் மற்றும் ஈரோடு-சேலம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டு உள்ளார்.
இந்த தேர்தல்களில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது கோவணம் கட்டியபடி மாட்டு வண்டியில் வந்த காரணத்தினால் “கோவணம் தங்கவேல்” என்று செல்லமாக அழைக்கப்படுகின்றார்.
இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடபோவதாக கோவணம் தங்க வேல் கூறியுள்ளார்.
இதுபற்றி கோவணம் தங்கவேல் கூறியதாவது: 2001ம் ஆண்டு நடந்த மொடக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டேன். பிறகு 2006, 2011-ம் ஆண்டுகளில் நடந்த மொடக்குறிச்சி தேர்தலிலும் இதுபோல சென்று மனு தாக்கல் செய்தேன்.
மேலும் 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தொகுதிகளில் ஈரோடு-சேலம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். விரைவில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் முடிவு செய்து உள்ளேன். இதற்காக வேட்பு மனு தாக்கல் தொடங்கும் முதல் நாளே நான் வேட்பு மனு தாக்கல் செய்வேன்.
உயர்ந்த எண்ணம் கொண்ட குடிமகன்: இந்திய நாடு விவசாயத்தில் தன்னிறைவு பெற வேண்டும், இந்திய விவசாயி இந்தியாவில் உயர் பதவியில் அமரவேண்டும்.
பள்ளி-கல்லூரிகளில் விவசாயம் கட்டாய பாடமாக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு நீர் வளமும், நில வளமும் தூய்மை குன்றாமல் கிடைக்க வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டுள்ளார் கோவணம் தங்கவேல்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எனக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக