நுவரெலியா நல்லாயன் மகளீர் கல்லூரியில் அண்மைக் காலமாக தமிழ் மாணவிகள் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கபடுகிறது..
இவர் குறித்த தமிழ் மாணவிகளை நெற்றிப் பொட்டு வைக்கவேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அந்த பாடசாலையின் அதிபரும் ஒரு சிங்களராவார். அங்கு தமிழ், சிங்கள, மொழிகள் இரண்டிலுமே
பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, இந்து இஸ்லாம், கிறிஸ்தவ, கத்தோலிக்க, பௌத்த மதங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் இங்கு கல்விபயின்று வருகின்றனர். எனினும் இந்து மதம் மற்றும் நெற்றிப் பொட்டு வைக்கும் மாணவிகள் அவற்றை வைக்கக் கூடாது என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
அப்படியும் அவர்கள் வைத்துக் கொண்டு வந்தால் பலவந்தமாக பொட்டுகள் அழிக்கப்பட்டு குறித்த ஆசிரியை காலால் அவற்றை மிதிப்பதாகவும் பெற்றோர் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயமாக கல்வித்துறை சார்ந்த உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். அன்பு நட்பு, ஒற்றுமை கண்ணியம் மதங்களையும் இனங்களையும் மதிக்கும் பண்புகளை கற்பிக்கும் பாடசாலையிலேயே இவ்வாறான இனவாத போக்கு கடைபிடிக்கப்படுவது வருந்தத்தக்க விடயமாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக