//]]>3

புதன், 30 மே, 2012

காலி கோட்டையின் கண்காணிப்பு பீரங்கிகள் 100 மாயம்


காலி கோட்டையின் கண்காணிப்பு நிலைகளில் பொருத்தப்பட்டிருந்த 100 பீரங்கிகள் காணாமற் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒல்லாந்தரின் ஆட்சியில் இலங்கை இருந்த போது, பயன்படுத்தப்பட்ட பீரங்களே காணாமற் போயுள்ளதாக காலி மரபுரிமைகள் நிறுவகம் தெரிவித்துள்ளது.
காலி கோட்டையில் இந்த பீரங்கிகளை கண்காணிப்பு நிலைகளில் பொருத்தி வைத்து ஒல்லாந்தர் பயன்படுத்தி வந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கையின் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜெகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தப் பீரங்கிகளை உலோகத்துக்காக களவாடிச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக