//]]>3

வெள்ளி, 30 மார்ச், 2012

374 மில்லியன் செலவில் ஊடகங்களுக்கு வசதிகளை புதிய ஊடக அபிவிருத்தி நிலையம்


உண்மையின் பலத்தை பயன்படுத்தி இலங்கை தொடர்பான சிறந்த செய்தி ஒன்றை உலகம் முழுவதும் பரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று நடைபெற்ற ஊடக அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வசதிகளை வழங்கும் நோக்கில் அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஊடக அபிவிருத்தி நிலையம் ஜனாதிபதியால் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

ஐந்து மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்திற்காக 374 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பகங்களைக் கொண்ட கேட்போர் கூடம்,  நூலகம்,  இரண்டு ஆய்வுகூடங்கள்,  கணணி மையம், அருங்காட்சியகம், ஒலி ஒளி வசதிகளைக் கொண்ட பிரிவு ஆகியன இந்த ஊடக அபிவிருத்தி நிலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஊடகம் ஜனநாயகத்தின் காவலன் என்பதன் அடிப்படையில் அசாதாரணத்திற்கும் அநீதிக்கும் எதிராக முன்நிற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவ்வாறு முன்நிற்பதோடு மாத்திரமல்லாமல், மக்களின் அபிவிருத்திக்காகவும் சந்ததியினரின் அடுத்தக் கட்ட பயணத்திற்காகவும் முன்நிற்பது ஊடகங்களின் பொறுப்பென ஜனாதிபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக