//]]>3

புதன், 18 ஏப்ரல், 2012

மக்கள் மீளக்குடியேறாமைக்கு இந்திய பொறுப்பாம்




இந்திய அனுசரணையுடன் சம்பூரில் அமைக்கப்பட உள்ள அனல் மின்நிலையம் திட்டம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையில் உள்ளனர். 

இவர்கள் இன்னமும் அகதி முகாம்களில் வாழும் நிலையினை சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய அனைததுக்கட்சி பாராளுமன்ற குழு திருகோணமலைக்கு நேரடியாக வந்து பார்வையிட வேண்டும் என திருகோணமலை நகராட்சி மன்ற உறுப்பினர் சி.நந்தகுமார் விடுத்துள்ள அறிக்யைில் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திருகோணமலை மாவட்டம் சம்பூரில் இந்தியாவின் அனுசரணையுடன் அமைக்கப்பட உள்ள அனல்மின் நிலையம் திட்டத்தினாலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு , யுத்தம் ஓய்ந்த நிலையில் தமது பூர்வீக நிலங்களில் மீளக்குடியேற முடியாதுள்ளனர் மூதூர் கிழக்கு வாழ் தமிழ் மக்கள். 

மூதூர் கிழக்கில் 1486 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பல வருடங்களாக அகதி முகாம்களில் சொல்லொணா துன்பங்களுடன் வாழ்கின்ற நிலைமையையும், இவர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த வளமிக்க பூமி அனல்மின் நிலையம் என்ற போர்வையில் பறிக்கப்பட்டிருப்பதை நேரடியாக பார்வையிட்டு அம் மக்களின் சோகங்களிற்கு முடிவுகட்ட சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய அனைத்துக் கட்சி குழு திருகோணமலைக்கு நேரடியாக வருகை தந்து பார்வையிடல் வேண்டும். 

இன்றும் இந்த மக்கள் தமத சொந்த நிலங்களில் மீளக்குடியேற முடியாமைக்கு இந்திய அரசும் ஒருவகையில் பொறுப்பு என்ற வகையில் இம் மக்களையும், இம் மக்கள் பிரதிநிதிகளையும் நேரடியாக சந்தித்து பதில் கூறவேண்டிய கடமைப்பாடு இந்திய அனைததுக் கட்சி குழுவிற்கு உரியது ஆகும். 

மேலும் இம் மக்களின் பிரச்சினையை தமிழ் மக்கள் மீது உண்மையான அனுதாபமும் அக்கறையும், கொண்ட தூதுக்குழுவினரைச் சந்திக்கும் அனைத்து கடசிகளும் இந்திய அனைத்து கட்சி குழுவினரை சந்திக்கும் போது இவ்விடயத்தை வலியுறுத்துமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக