//]]>3

திங்கள், 2 ஏப்ரல், 2012

517,000 சதுர கிலோமீற்றருடைய கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடிக்கலாம்





1976 ஆம் ஆண்டு சமுத்திர வலய சட்டத்தின் மூலம் இலங்கைக்கு உரித்தான 200 கடல் மைல் துரத்தினைக் கொண்ட 517,000 சதுர கிலோமீற்றருடைய கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடலாம் என யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் புதிய உதவிப்பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி தெரிவித்தார். 

அத்துடன், வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தற்போது பாவனையிலுள்ள மீன்பிடிக் கலன்களின் எண்ணிக்கையை 2013ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கென 25 மில்லியன் ரூபா நிதியுதவியினை வழங்குவதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், யாழ் மாவட்ட மீனவர்களுக்கு தற்போது தகுதி அடிப்படையில் மானிய அடிப்பையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாகவும், பத்து தொடக்கம் பதினைந்து நாட்களை வரை கடலில் நின்று மீன்பித் தொழில் ஈடுபடும் மீனவர்களுக்கு 30,000 ரூபா மானியமும், ஒவ்வொருநாளும் மீன்பிடிக்கச் சென்று தீரும்புபவர்களுக்கு 18,000 ரூபா மானியமும், வெளி இயந்திர தும்புக் கண்ணாடிப் படகு உரிமையாளர்களுக்கு 6,250 ரூபா மானியமும் வழங்கப்படுவதுடன், வெளி இயந்திரப் பாரி படகு உரிமையாளர்களுக்கு 6,250 ரூபா எரிபொருள் மானியமும் வழங்கப்படுவதாகவும் கணேசமூர்த்தி நடராஜா குறிப்பிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக