//]]>3

திங்கள், 4 ஜூன், 2012

யாழில் 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்



யாழ். குடாநாட்டில் கடந்த ஒரு வார காலத்தில் பிடிவிறாந்து பிடிக்கபட்ட 34 பேரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்களை கடந்த வாரத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொள்ளை உள்ளிட்ட பல்வேறுபட்ட 14 குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக இன்று (04) யாழ். பொலிஸ் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் அவர்களிடம் இருந்து மீட்க்கப்பட்ட பொருட்களையும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தியதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
நாவற்குழியில் அண்மையில் 8 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவர் என சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் வைத்திய அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் மீளவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.
அச்சுவேலியில் அண்மையில் கொலை செய்யப்பட்ட 81 வயது மூதாட்டியின் வீட்டில் கொள்ளைகள் எதுவும் இடம்பெறவில்லையென தெரிவித்த யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக