//]]>3

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இளம்பெண் வவுனியாவில் சடலமாக மீட்பு



வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள கிணறொன்றில் இருந்து 25 வயதுடைய இளம்பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக  வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தனது உக்கிளாங்குளத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு வந்த மரியா கெனட் பவுசியா என்ற பெண் நேற்று மாலையிலிருந்து காணாமல்போயிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறுதி யுத்ததின் போது, இறந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »