//]]>3

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

மிஸ் அழகிப் போட்டி ரத்து



சுவிட்சர்லாந்தில் 2012ம் ஆண்டில் நடைபெறுவதற்காக திட்டமிடப்பட்டிருந்த மிஸ் சுவிட்சர்லாந்து பட்டத்திற்கான அழகிப் போட்டி நிதிப் பற்றாக்குறை காரணமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியின் இயக்குநரான கிறிஸ்டோபர் லோச்செர், ஞாயிறன்று நாளிதழுக்கு அளித்த பேட்டியில் வேறு வழி இல்லாததால் நாங்கள் இந்த முடிவெடுத்தோம் என்றார்.
எதிர்வரும் 2013ம் ஆண்டில் இந்த நிதிப் பிரச்னை தீர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் இந்தப் போட்டியை நடத்தலாம் என்றார்.
கடந்த செப்டம்பரில், இந்தப் போட்டியை நடத்தத் திட்டமிட்டபோது தொலைகாட்சி நேயர்கள் ஆர்வமின்மையால் பொதுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நிலையத்தார் முன்வரவில்லை. பின்பு தனியார் தொலைக்காட்சியான 3+ புதிய வர்த்தகப் பங்குதாரராக இணைந்தது.
இவ்வாறு 2012 அழகிப்போட்டி ரத்து செய்யப்பட்டதால் கடந்த 2011ம் ஆண்டின் அழகியான 20 வயது அலினா புக்ஸ்காச்செர் இன்னும் ஒரு வருடத்திற்கு அழகிக்கான கிரீடத்தை வைத்திருப்பார்.
ஆணழகன் போட்டியும் கடந்த 2011ம் ஆண்டில் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்து பிறகு நடத்த முடியாமல் போய்விட்டது. இதற்கும் அரசு தொலைக்காட்சியின் ஆதரவு கிடைக்கவில்லை.
தற்போது 3+ என்ற தனியார் தொலைகாட்சியுடன் மூன்றாண்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இனி அடுத்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் அழகன், அழகி போட்டிகள் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக