//]]>3

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இலங்கை வீரர் மேத்தியூசிற்கு எச்சரிக்கை



இலங்கை அணியின் பன்முக ஆட்டக்காரர் ஏஞ்சலோ மேத்யூஸ் மும்பை அணியில் பந்து வீச வேண்டாம் என்று இலங்கை அணியின் பிரதம தெரிவாளர் அசந்த டி.மெல் எச்சரித்துள்ளார்.
அண்மைக்காலமாக தொடர்ச்சியாக உடற்தகுதிப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் மேத்யூஸ், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதிப்போட்டிகளில் பங்கேற்க வில்லை. அதன் பின்னர் நடைபெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
இங்கிலாந்து அணி இலங்கைக்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக வந்திருந்த போது முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்ற முடியாத நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனியே துடுப்பாட்ட வீரராகப் பங்குபற்றியிருந்தார்.
ஆனால் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை அணியில் துடுப்பெடுத்தாடுவதுடன், பந்துவீச்சையும் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக இலங்கை அணியின் பிரதம தெரிவாளர் அசந்த டி. மெல் கூறுகையில், எங்களுக்கு ஐ.பி.எல். போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் உரிமை கிடையாது எனவும், வீரர்களைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
மேத்யூஸ் காயமடைந்ததால் தொடர்ந்து பந்து வீசினால் பிரச்சினை ஏற்படும் என தெரிவித்து விட்டோம், ஆனால் அவர் தொடர்ந்து செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்றார்.
கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு எது முக்கியமானது என்பதை அவர்களே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், ஐ.பி.எல். போட்டிகளா அல்லது நாட்டுக்காக விளையாடுவதா என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக