//]]>3

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

நூலகத்தின் எல்லாப் பகுதிகளும் முக்கியத்துவமானவை



நூலகத்தின் எல்லாப் பகுதிகளும் முக்கியத்துவமானவை என்பதைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு பகுதிகள் பாதிக்கப்படாத வகையில் இங்கே நடைபெறுகின்ற கருத்தரங்குகள் கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டும் என பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொளில் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்த அவர்கள் தெரிவித்தார்  

யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (17.04.2012) மாலை 3.30 மணிக்கு  நூலக உத்தியோகத்தர்களுடன்  நடைபெற்ற நூலக அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நூலகத்தின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுக்காக வடமாகாண ஆளுநர் 10 மில்லியன் ரூபாவை செலவு செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் அந்நிதியைக் கொண்டு  எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்று கவனம் செலுத்தப்பட வேண்டும். என்றார் 

என்பதுடன் நூலகத்தின் நலனிற்கும் அதன் வளர்ச்சிக்கும் எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட அமைச்சர் அவர்கள் பாடசாலை மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை கூட்டும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார் 

நூலகத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புறப் பகுதிகளுக்கு வர்ணம் பூசப்படும் போதும் யாழ்ப்பாணத்தின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமையப் பெறுதல் முக்கியமானது. 

அத்துடன் நூலகத்தின் சகல பகுதிகளின் செயற்பாடுகளும் கணனி மயப்படுத்தப்படுவதுடன் நவீனமயப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் பகுதியின் பயன்பாடுகளை மென்மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டார் 

மேலும் கூறிப்பிட்ட அவர் குடிபோதையிலும் உல்லாசப் பயணமாகவும் நூலகத்திற்கு அநாகரீகம் அற்ற முறையில் வருவோரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் எனவும் அதற்கு பொறுப்புடைய உத்திபேயாகத்தர்களுக்கு அறிவுரை வழங்கினார் 

நிகழ்வு முடிவடைந்ததும் நூலகத்தின்மொட்டை மாடிப் பகுதியை பார்வையிட்ட அமைச்சர் அவர்கள் அதனையும் நூலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சீரமைப்பு செய்வது குறித்தும் கலந்தாலோசித்தார் 

இந்த கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் மாநகர ஆணையாளர் சரவணபவ மதத்தலைவர். கல்லூரி அதிபர்கள் பத்திரிகை யாழர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக