//]]>3

செவ்வாய், 26 ஜூன், 2012

கிளிநொச்சியில் இளைஞர்கள் அட்டகாசம்

கிளிநொச்சி ஆனந்தபுரத்திலுள்ள முஸ்லீம் கடையில் தங்கியிருக்கும் பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு வருகின்ற இளம்பெண்களிடம் சேஷ்டையில் ஈடுபட்டு வருவதோடு திருமணம் செய்யுமாறு அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



மேற்படி முஸ்லீம் கடையில் தங்கியுள்ள பணியாளர் கல்வி நிலையம் வருகின்ற இளம் பெண்களிடம் தகாத வார்த்தைகளை பிரயோகிப்பதோடு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக திருமணமாகி பிள்ளைகளின் தந்தையான முஸ்லீம் குடும்பத்தவர் ஒருவர் தாய் தந்தையர்களை இழந்த இளம் பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்யுமாறு வற்புறத்தி வருவதோடு பயமுறுத்தியும் வருகின்றார்.
மேலும் இக்கடையில் பணி புரிகின்றவர்கள் கல்வி நிலையம் வருகின்ற பெண்களிடம் ஜ.லவ்.யூ என்று நடுவீதியிலேயே கூறி வேடிக்கையாக விளையாடி வருகின்றனர்.
இதனால் யுத்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் பாதிப்படையலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.
தமிழர்களது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் இவ்வாறு இவர்கள் செயற்படுவது குறித்து பொது மக்கள் மிகவும் கவலை வெளியிட்டதோடு இவற்றை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக