//]]>3

செவ்வாய், 26 ஜூன், 2012

வெடித்து சிதறிய mobil



அயர்லாந்தில் செம்சுங் கெலக்ஸி எஸ் 3 ஸ்மார்ட் போன் ஒன்று காரில் வைத்து சார்ஜ் செய்யும் போது கீழ்ப்பகுதி வெடித்து புகைந்துள்ளது.

எரியுண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் பரவியதை தொடர்ந்து செம்சுங் நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூடிய விரைவில் வெடிப்புக்கான காரணத்தினை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும் அப்பாவனையாளருக்கு புதிய செம்சுங் கெலக்ஸி எஸ் 3 ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் சந்தைக்கு விற்பனைக்கு வந்து சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றது செம்சுங்கின் கெலக்ஸி எஸ் 3.
நவீன தொழில்நுட்ப வசதிகள் பலவற்றுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனானது வெடித்துச்சிதறியமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் அப்பிள் ஐ போன்கள் வெடித்துச் சிதறிய சம்பவமும் உலகின் சில இடங்களில் பதிவானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக