//]]>3

திங்கள், 21 மே, 2012

டெல்லியில் 1000 மெற்பட்ட பிணங்கள் மீட்பு



டெல்லியில் இந்த ஆண்டு 1000க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத பிணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தெற்கு டெல்லியில் ராணுவ காலனி அருகே நேற்றுமுன்தினம் கிடந்த பையில் துண்டு துண்டாக வெட்டிய நிலையில் ஆண் உடல் இருந்தது. இதுபோல மத்திய டெல்லியில் பிரசாத் நகரில் கிடந்த பையில் முற்றிலும் அழுகிப் போன நிலையில் வாலிபர் உடல் இருந்தது.
இவற்றோடு சேர்த்து இந்தாண்டு மட்டும் 1,012 அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 3,337 அடையாளம் தெரியாத பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது.

வடக்கு டெல்லியில் தான் அதிக சடலங்கள் கிடந்துள்ளன. அங்கு 245 பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய டெல்லியில் 116, வடகிழக்கு டெல்லியில் 68, கிழக்கு 60, மேற்கு 56, வடமேற்கு 55, தெற்கு 48, புதுடெல்லியில் 31, தென்மேற்கு 28 என்ற எண்ணிக்கையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அருகே உள்ள மாநிலங்களில் கொலை செய்யப்படும் நபர்களின் உடல்களை டெல்லியில் வந்து போட்டுவிடுவதாக போலீசார் கூறுகின்றனர். இது குறித்து கவலை தெரிவித்துள்ள முதல்வர் ஷீலா தீட்சித், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக