//]]>3

வியாழன், 19 ஏப்ரல், 2012

மீட்பு விமானப் படையின் புதிய சாதனை



சுவிசின் மீட்பு விமானப் படையான Rega கடந்தாண்டு அதிகளவு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளது.
இந்த படை கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் 14,240 முறை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த மீட்பு விமானப்படையின் அவசர கால ஜெட் விமானங்கள் 698 முறை அவசர காலப் பணிகளை மேற்கொண்டன. பயண விமானங்களில் மருத்துவக்குழு 147 முறை பல்வேறு இடங்களுக்கு சென்று காயம்பட்டோருக்கும் நோயுற்றோருக்கும் சிகிச்சையளித்தது.
கடந்தாண்டு TCS எனப்படும் சுவிட்சர்லாந்தின் சுற்றுலா மன்றத்தின் மூலமாக ஓர் அவசர கால விமான சேவை புதிதாகத் தொடங்கப்பட்டது. இந்த TCS ஜுரிச்சில் உள்ள அல்பைன் ஏர் ஆம்புலன்ஸ் (AAA) என்ற அவசரகால விமான சேவையுடன் இணைந்து தனது புதிய சேவையைத் தொடங்கியது.
சுவிஸ்ஸின் மீட்பு விமானப்படைக்கு 2.4 மில்லியன் புரவலர்கள் இருக்கின்றனர். இதனால் இந்த சேவை பாதிக்கப்பட்டோரிடம் சேவைக் கட்டணம் எதுவும் பெறாமல், மருத்துவக் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு மூலமாகவும் பணம் எதுவும் பெறாமல் உதவி செய்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக