//]]>3

வியாழன், 19 ஏப்ரல், 2012

காதலன் தற்கொலையை நேரடியாக பார்த்த காதலி


பிரிட்டனில் ஓக்ஸ்போர்ட் பகுதியைச் சேர்ந்த ஆட்ரியன் றோலண்ட் (வயது 53) ஆட்டோ மொபைல் ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
இவரும் காதலி சூலி ஜாலின்ஸ்கியும் மார்ச் மாதம் புதுடெல்லி வந்தனர். தாஜ்மஹால் உட்பட சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்த்தனர்.


இதையடுத்து காதலி சூலி பிரிட்டனுக்கு புறப்பட, றோலண்ட் தென்டெல்லியில் கிரீன் பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தினமும் இணையதளம் மூலமாக ஒருவரையொருவர் பார்க்கும் படி பேசிக்கொள்வர்.


சம்பவதன்று இருவரும் பேசுகையில் றோலண்ட் தன்னை யாரோ கொலை செய்ய வருவது போல அறையில் அங்கும் இங்கும் ஒரு மனநோயாளி போல ஓடியுள்ளார். இந்நிகழ்வை பிரிட்டனிலிருந்து காதலி சூலி பார்த்து அதிர்ச்சியுற்றார்.


மேலும் இந்நிகழ்வை தன் தோழியை அழைத்தும் பார்க்க வைத்தார். காதலன் றோலண்ட் ஓடியவாறு சமயலறையில் ஒரு போத்தலை எடுத்து அதை உடைத்து தனது கழுத்தில் குத்திக்கொண்டார்.


இதனால் மளமளவென ரத்தம் பீறிட்டு ஓடியது. உடனே சூலி பிரிட்டன் தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு காப்பாற்றும் படி வேண்டுகோள் விடுக்க அவர்கள் டெல்லியில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு விடயத்தை தெரியப்படுத்தினர்.


பின்னர் றோலண்டை காப்பாற்ற சம்பவ இடத்திற்கு பொலிஸ் விரைந்தது. இருப்பினும் பொலிஸாரால் றோலண்டை காப்பற்ற முடியவில்லை.
இந்நிகழ்வை பார்த்த காதலி சூலி மயக்கமடைந்தார். றோலண்ட் உடலை காதலியுடன் ஒப்படைக்க இந்தியத் தூதகரம் முடிவெடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக