//]]>3

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

வட கொரியாவின் செயற்கை கோள் வெடித்து சிதறியது


வட கொரியா நீண்ட தூரம் செல்லும் செயற்கைகோளை ஏவி சோதனை செய்தது. ஆனால் சிறிது நேரத்தில் செயற்கைகோள் வெடித்து சிதறி தோல்வியில் முடிந்தது.
வடகொரியாவின் நிறுவன தலைவர் கிம் 2 சங் 100-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக விண்ணில் கண்காணிப்பு செயற்கைகோள் ஒன்றை ஏவ வடகொரியா முடிவு செய்தது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
இதற்கு ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை சோதனை நடத்தவே இந்த ஏவுகணை ஏவப்படுவதாக குற்றம் சாட்டின. இதை வடகொரியா மறுத்தது. வானிலை ஆய்வுக்காகவே அனுப்பப்படுவதாக கூறியது.
அதே நேரத்தில் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டால் ஏவுகணை வீசி தாக்கி அழிக்கப் போவதாக ஜப்பான் மிரட்டி வந்தது. அதையும் மீறி வடகொரியா உள்நாட்டு நேற்று காலை 7.40 மணி(சர்வதேச நேரப்படி நேற்று இரவு 10.40 மணிக்கு) விண்ணில் ஏவியது.
ஆனால் வடகொரியாவின் முயற்சி தோல்வி அடைந்தது. செயற்கைகோள் ஏவப்பட்டதும் சீறிப்பாய்ந்தபடி விண்ணில் பறந்தது. அதே நேரத்தில் அடுத்த ஒரு நிமிடத்தில் நடுவானில் வெடித்து சிதறியது. அவற்றின் சிதறல்கள் தென்கொரியாவின் குன்சன் துறைமுகத்தில் இருந்து தென்மேற்கில் 200 கி.மீட்டர் தூரத்தில் மஞ்சள் கடலில் விழுந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக