அமெரிக்காவில் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் டொனால்டு டிரம்ப்ஸ் என்ற அமைப்பின் சார்பில் உலக அழகிப் போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு நாடுகளில் அழகிப்பட்டம் வென்றவர்கள், இந்த போட்டியில் பங்கேற்பார்கள். அதன்படி, கனடா நாட்டின் அழகி போட்டியில் ஜென்னா தலக்கோவா என்ற 23 வயது மாடல் அழகி பங்கேற்றார்.
இறுதி சுற்று வரை தகுதி பெற்ற அவருக்கு போட்டியில் தொடர்ந்து நீடிக்கத்தடை விதிக்கப்பட்டது. காரணம், ஜென்னா ஆணாக இருந்து பெண்ணாக மாறிவர் என்பதுதான்.
உலக அழகி போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒருவர் இயற்கையிலேயே பெண்ணாக பிறந்து இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. தற்போது ஜென்னா உண்மையிலேயே ஒரு பெண்தான் என்றாலும் விதியின்படி அவரை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த முடிவை எதிர்த்து மாடல் அழகி ஜென்னா போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு ஆதரவாக பொதுமக்களும் குரல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து கனடா அழகி போட்டியில் பங்கேற்க ஜென்னாவுக்கு போட்டியை நடத்தும் அமைப்பு அனுமதி வழங்கி இருக்கிறது.
ஜென்னாவுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டபோது பேட்டி அளித்த கனடா அழகி போட்டி அமைப்பாளரான டெனிஸ் தவிலா, ஜென்னா உண்மையான பெண்ணைப்போல் இருக்கிறார்.

அவர், உண்மையான பெண்தான். ஆனால், விதிகளின்படி (பிறக்கும்போதே பெண்ணாக பிறந்து இருக்க வேண்டும்) அவரை அனுமதிக்க முடியாது என்று கூறி இருந்தார்.
அதற்கு விளக்கம் அளித்த ஜென்னா, 4 வயது வரை பெண்ணாகவே இருந்ததாகவும், அதன் பின்பு ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தினால் ஆணாக மாறி, பின்பு 19-வது வயதில் அறுவை சிகிச்சை மூலம் முழுமையான பெண்ணாக மாறிவிட்டதாகவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக