இங்கிலாந்தில் உள்ள கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் பாக்கெட்டுகளை அதிகளவு விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், வரிசையாக அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு விளம்பரப்படுத்துவதன் மூலம் அவை இளைஞர்களை சுண்டி இழுத்து புகைக்கும் ஆவலை தூண்டுகிறது.
எனவே இளைஞர்கள் அவற்றை வாங்கி புகைப்பதால், புற்றுநோய், காசநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகுகின்றனர்.
இதை தடுக்க கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை அடுக்கி வைத்து விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நேற்று முதல் அமுலுக்கு வந்தது.
அரசின் இந்த நடவடிக்கையை பலர் வரவேற்றுள்ள போதிலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக