//]]>3

வியாழன், 5 ஏப்ரல், 2012

யாழ்ப்பாண நிலப்பரப்பில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்







யாழ்ப்பாண நிலப்பரப்பில் கடல்நீர் கலப்பதால் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்குரிய சிறந்த திட்டங்கள் எதுவும் இல்லாதிருப்பது எதிர்காலத்தில் நீர்வளம் அழிக்கப்பட்டு நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையை உருவாக்கிவிடும் என்று அமெரிக்க தூதரக அலுவலரும் சூழலியலாளருமான கிறிஸ்ரோபர் கோகே தெரிவித்துள்ளார்.

யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உள்ளூர் அளவில் நடவடிக்கை எடுக்க "உலகத்தை அணிதிரட்டுவோம்" என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (04.04.2012) புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின்போது பொது விரிவுரையை கிறிஸ்ரோபர் கோகே ஆற்றிய போதே இவர் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் அழகான கடற்கரைகள் இருக்கின்றன என்றும், இந்த கடற்கரைகளில் கழிவுப் பொருட்களை அகற்றி பாதுகாக்க வேண்டும் என்றும் கூறிய அவர், யாழ்ப்பாணத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு எமக்கு ஏற்படக் கூடிய  பொருளாதாரப் பிரச்சினைகளைத் தடுக்க முடியும் என்றார்.

இலங்கையில் காடுகள் அழித்தல் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினை கட்டுப்படுத்த முடியாது தொடர்ந்து நீடித்து வருகிறது.  இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் ஊடாக உல்லாசத் துறையை மேம்படுத்த முடியும் எனவும் அமெரிக்க தூதரக அலுவலரும் சூழலியலாளருமான கிறிஸ்ரோபர் கோகே தெரிவித்தார்.

சூழலைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் எதிர்காலத்தில் இயற்கையால் எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்படவாய்பு இல்லை எனக் குறிப்பிட்டதுடன், தற்போது கடல் நீர் ஒவ்வொரு வருடமும் ஒரு கிலோ மீற்றர் தூரம் தரையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் இதனால் வயல் நிலங்களில் உவர்நீர் கலக்கின்றமையால் நெற்பயிர்ச்செய்கை பாதிப்படையும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக