//]]>3

வியாழன், 5 ஏப்ரல், 2012

யாழ் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளையும் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு


யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில், இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதுடன், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளையும் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 


வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில், கடந்த சில நாட்களாக, இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 



இதனால் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திடம் முறையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அவ்வாறு அத்துமீறலில் ஈடுபடும் இந்தியக் கடற்றொழிலாளர்கள், தடைசெய்யப்பட்ட டைனமற் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், இரவு வேளைகளில் இழுவைப்படகில் வரும் அவர்கள், படகில் விளக்குகளை அணைத்துவிட்டு வெளிச்சம் இல்லாமல் பிரவேசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 



இதனால் அவர்கள் வந்து செல்வது தெரியாதிருப்பதாகவும் குறித்த பகுதி கடற்றொழிலாளர்களின் சிறு படகுகள், இந்திய இழுவைப் படகுகளில் மோதுவதாகவும் கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக