நாயன்மார்க்கட்டு வெயிலுகந்த விநாயகர் ஆலயத்திலும், நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திலும் இன்று(04.04.2012) புதன்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
இந்து சமுத்திரத்தின் முத்து எனப் போற்றப்படும் ஈழமணித் திருநாட்டின் யாழ்ப்பாணம் நல்லூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சிங்கையாரியச் சக்கரவர்த்தியால் தனது அரண்மனைக்கு கிழக்கே தான் தரிசித்துச் செல்வதற்காக அமைக்கப்பட்ட ஆலயமே இந்த வெயிலுகந்த விநாயகர் ஆலயம்.
இங்கு ஆதியிலிருந்தே சைவக்குருக்களினால் பரிபாலிக்கப்பட்டு, நித்திய, நைமித்திய வழிபாடுகள் ஆற்றப்பட்டு வருகின்றது.
இந்த ஆலயத்தின் 2012ஆம் ஆண்டுக்கான வருடாந்த மஹோற்சவம் மார்ச் 27ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய, இன்று தேர்த் திருவிழா நடைபெற்றது. காலை 9.00 மணியளிவில் வசந்தமண்ட சையினைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்குத் தேர் வீதியுலா வந்தது.
இந்த தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள், காவடி, பாற்செம்;பு, அங்கப் பிரதட்சணம் என தமது நேர்த்திக் கடன்களை நிறுவேற்றினர். நாளை வியாழக்கிழமை தீர்த்தத் திருவிழா நடைபெறவுள்ளது.
இதேவேளை, சட்டநாதர் சிவன் (நல்லைநாயகி சமேத நல்லைநாத சுவாமி) ஆலயத்திலும் இன்று இன்று (04.04.2012) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு ஆலயபிரதம குரு சபரிமலை குருசுவாமி சபரீ கான விநோதன் பிரம்மஸ்ரீ தானு வாசுதேவ சிவாச்சாரியார் தலைமையில் ரதோற்சவம் நடைபெற்றது.
கணபதி, முருகன், வீரலட்சுமி அம்மன், சண்டேஸ்வரர் ஆகிய சுவாமிகள் கட்டுத்தேரிலும், சட்டநாததர் சுவாமி இரதத்திலுமாக 5 இரதங்களில் பவணிவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக