//]]>3

வியாழன், 5 ஏப்ரல், 2012

2012 ஆம் ஆண்டின் வடமாகாண நாயகன், நாயகியாக யாழ்ப்பாணத்தவர்கள் _



 “ஸ்ரூடியோ 9” நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக நடாத்தப்பட்ட வடமாகாண நாயகன், நாயகியாக தேர்வில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணா ராஜேந்திரா மற்றும் ஆனன் பேர்னாட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ரில்கோ உல்லாச விடுதியில் (31.03.2012) வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு இலங்கை அழகிகள் சங்கத்தலைவி சுபாசினி அபயவர்த்தன தலைமையில் நடைபெற்ற இறுதிக்கட்டத் தேர்விலேயே இவர்கள் வடமாகாண நாயகன், நாயகியாக தெரிவு செய்யப்பட்டு பட்டம் சூட்டிக்கொண்டனர்.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநெச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும் இருந்து ஒவ்வொருவரினதும் தனித்திறமைகள் , முகபாவம், நடை, உடை, பரந்து பட்ட அறிவு, ஆளுமைத் திறன்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 15 போட்டியாளர்களுக்கு இடையிலான இறுதிப்போட்டியிலேயே இவர்கள் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற இறுதிப்பேட்டியில் முதல் சுற்றில் போட்டியாளர்களின் அறிமுகமும், இரணடாவது சுற்றில் குலுக்கல் முறையில் ஏற்பாட்டுக் குழுவினரின் கேள்வித் தொகுப்பில் இருந்து ஒரு கேள்விக்கான பதிலும் மூன்றாவது சுற்றில் போட்டியாளரினால் தெரிவு செய்யப்பட்ட நடுவர் கேட்ட கேள்விகள் பதில் அளித்தலுமான போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்வின் இறுதியாக போட்டியாளர்களுடைய தனித் திறமையினை வெளிக்காட்டிய காணொளி காண்பிக்கப்பட்டது.

யாழ் ரில்கோ உல்லாச விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், இராணுவ உயர்அதிகாரி கேணல் ஜயசிங்க ஆகியோர் பிரதமவிருந்தினராகவும் சிறப்புவிருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். 
___

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக