//]]>3

வியாழன், 5 ஏப்ரல், 2012

விமானத்தை தரையிறக்கிய மனைவி


அமெரிக்க நாட்டின் விஸ்கான்சின் நகருக்கு அருகில் மனைவியுடன் சிறு விமானத்தில் சென்ற பைலட் கணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சாய்ந்தார்.


அதுவரை விமானத்தை ஓட்டியே பழக்கம் இல்லாத மனைவி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தந்து அவர்களுடைய உதவியுடன் விமானத்தைப் பத்திரமாக தரை இறக்கினார். ஆனால் அதற்குள் கணவர் இறந்துவிட்டார்.
கணவருக்கு வயது 81, மனைவிக்கு வயது 80. இருவருடைய பெயர்களையும் இதர விவரங்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
செஸ்னா ரக விமானத்தைக் கணவன் ஓட்டினார். திடீர் மாரடைப்பால் அவர் அப்படியே இருக்கையில் மயங்கிச் சாய்ந்தார்.
மனைவி உடனே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தந்தார். அவர்கள் பயிற்சி பெற்ற விமானி ஒருவரை விமானத்தில் அனுப்பினர். அவர் இந்த விமானத்துடன் பறந்து வெளியில் இருந்தபடியே விமானத்தை இயக்க அவருக்குக் கற்றுத்தந்தார்.
விமானத்தின் வலதுபுற இன்ஜினில் எரிபொருள் தீர்ந்துவிட்டது. விமான நிலையத்தை 10 முறை வட்டமடித்த பிறகு தரை இறக்கினார் அந்தப் பெண்.
2 அல்லது 3 முறை குலுங்கிய விமானம் மூக்கு மண்ணில் புதைய நின்றது. ஆனால் அதற்குள் அவருடைய கணவர் இறந்து விட்டார். அந்தப் பெண்ணின் உறுதியையும் பொறுமையையும் அனைவரும் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக