வெள்ளித்திரையில் கொடிகட்டி பிறந்த நடிகை சிம்ரன், கல்யாணத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்டார்.
 இப்போது சின்னத்திரையில் அசத்தி கொண்டிருக்கும் சிம்ரன், ஜெயா டி.வி.யின் ஜாக் பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் 500வது எபிசோட்டை துபாயில் நடத்தி வருகின்றனர் ஜெயா டி.வி. குழுவினர். இதற்காக தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாய் சென்றிருந்தார் சிம்ரன். 
சிம்ரனுக்கு நேற்று 04.04.12ம் திகதி பிறந்தநாள். தனது பிறந்தநாளை துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் தனது கணவர், குழந்தைகள் மற்றும் ரசிகர்களுடன் எளிய முறையில் கொண்டாடினார்.
பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரமுகர்கள் தங்களது வாழ்த்துக்களை நடிகை சிம்ரனுக்கு தெரிவித்துக் கொண்டனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக