//]]>3

சனி, 30 ஜூன், 2012

சுன்னக் செய்ய ஜெர்மனி நீதிமன்றம் தடை! முஸ்லிம், யூதர்கள் எதிர்ப்பு

சுன்னத்து எனப்படும் சிறுவர்களின் ஆணுறுப்பின் நுணித்தோலை அகற்றுவதற்கு ஜெர்மனி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. "தமது உடலை உருக்குலைக்காமல் வைத்திருக்கும் உரிமை குழந்தைகளுக்கு இருப்பதோடு அதனை பெற்றோர்கள் குறைத்துமதிப்பிடுகின்றனர்" என்று மேற்கு ஜெர்மனியின் கொலக்னெ நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.


எனினும் சிறுவர்களுக்கு தமது உடல் குறித்து தீர்மானிக்கும் வயது வந்ததும் நுணித்தோல் அகற்றுவது குறித்து அவர்களுக்கு முடிவெடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நான்கு வயது முஸ்லிம் சிறுவன் ஒருவனுக்கு ஆணுறுப்பின் நுணித்தோல் அகற்றியதைத் தொடர்ந்து (சுன்னத் செய்தல்) ஏற்பட்ட காயம் குறித்து அதனை செய்த மருத்துவர் மீது பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.

இது குறித்து தீர்ப்பளித்த நீதிமன்றமே இந்த தடையை விதித்துள்ளது. இந்தத் தடைக்கு ஜெர்மனி முஸ்லிம் மற்றும் யூதத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். நூற்றாண்டு காலமாகக் கடைப்பிடித்துவந்த மதச் சடங்குகளை இந்த தீர்ப்பு அவமதிப்பதாக மதத்தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகில் 15 வயதுக்கு கீழான ஆண்களில் மூன்றில் ஒருவருக்கு ஆணுறுப்பின் நுணித்தோல் அகற்றப்படுவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க மருத்துவமனைகளில் கைக்குழந்தைகளுக்கு சுகாதார காரணங்களுக்காக இந்த சத்திரசிகிச்சை செய்யப்படுவது வழக்கத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக