//]]>3

சனி, 30 ஜூன், 2012

தமிழ்வின் இணையத்தளம் தடை


விடுதலைப்புலிகள் சார்பு ஊடகமான தமிழ்வின் இணையத்தளம் உட்பட ஐந்து தமிழ் இணையத்தளங்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்ட இலங்கை உரிமைகளுக்கான வலையமைப்பு ( NFR – Network for Rights) தெரிவித்துள்ளது.
தமிழ்வின், அதிர்வு, பொங்குதமிழ், பதிவு மற்றும் சரிதம் ஆகிய இணையத்தளங்களே இலங்கையில் பார்வையிட முடியாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த இணையத்தளங்கள்
இலங்கை நாட்டிற்கும், அரசாங்கத்திற்கும் தொடர்சியாக இவ் இணையத்தளங்கள் அபகீர்த்தியை ஏற்படுத்தியதே தடைசெய்யப்படுவதற்கான காரணமாக இருக்கலாம் என்று வாசகர்கள் கறுத்து தெரிவிக்கின்றனர்.
போர்க்காலங்களில் புலிகளால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு, நில அபகரிப்பு உட்பட அனைத்து விடயங்களையும் மறைத்து வசதியாக தமது புலி விசுவாசத்தை காட்டிய தமிழ்வின் இணையத்தளம் அண்மைக்காலமாக முஸ்லிம் செய்தியாளர்களை இலக்கு வைத்து செய்திகளை எழுதி கேவலமான இனத்துவேச வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007ம் ஆண்டு தமிழ்நெட் இணையத்தளம் இலங்கையில் தடை செய்யப்பட்டது. அதேபோல் சிங்கள இணைய ஊடகங்களான லங்கா நியுஸ், லங்கா இ நியுஸ், லங்கா நியுஸ் வெப், மற்றும் ஸ்ரீலங்கா கார்டியன் ஆகியனவும் தொடர்ந்து தடை செய்யப்பட்டன.
இலங்கை செய்திகளை வெளியிடும் எந்தவொரு இணையத்தளமும் முறைப்படி சிறிலங்கா அரசிடம் அதற்குரிய அனுமதி பெற்று தம்மை பதிவு செய்திருக்க வேண்டுமென புதிய அறிவிப்பை  கடந்த 2011ம் ஆண்டு சிறிலங்கா அரசு வெளியிட்டது.
இணையத்தளங்களை தடை செய்வதை எதிர்த்து  சுதந்திர ஊடக கண்காணிப்பு அமைப்புக்கள் தாக்கல் செய்த வழக்கை கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக