//]]>3

ஞாயிறு, 8 ஜூலை, 2012

சுவிட்சர்லாந்தில் இரகசிய கணக்குகளை பேணுவோர்


சுவிட்சர்லாந்து வங்கிகளில் இரகசியமான முறையில் வங்கிக் கணக்குகளை பேணி வருவோர் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இலங்கை மத்திய வங்கியினால் இந்த விசாரணைகள்ஆரம்பிக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டில் இலங்கை முதலீட்டாளர்கள்,தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களினால் சுவிட்சர்லாந்து வங்கிகளில் 85 மில்லியன்சுவிஸ் பிராங்குகள் வைப்புச் செய்யப்பட்டுள்ளன.
 
மத்திய வங்கியின் அனுமதியின்றி அவ்வளவு பெரியதொகைப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்ய முடியாது எனசுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேரடியாக சுவிஸ் வங்கிகளில் பணம் வைப்புச் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
 
 
சுவிட்சர்லாந்தில் வாழும் உறவினர்களின் உதவியுடன் குறித்த நபர்கள் பணத்தை வைப்புச் செய்திருக்கலாம் என மத்திய வங்கியின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
உச்சபட்சமாக பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சட்ட ரீதியாக 10000 அமெரிக்க டொலர்களை எடுத்துச் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், விசேட பிரபுக்கள் செல்லும்பகுதியில் பயணம் செய்வோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை எனவும் அவர்களினால்எவ்வளவு பணத்தையும் எடுத்துச் செல்லக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக