//]]>3

ஞாயிறு, 8 ஜூலை, 2012

அமெரிக்க ராணுவ தளங்களை நிர்மூலமாக்கி விடுவோம்

எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஈரானை சுற்றியிருக்கும் 35 அமெரிக்க ராணுவ தளங்கள் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் நிர்மூலமாக்கப்படும் என்று ஈரான் விமானப்படை கமாண்டர் அமிர் அலி ஹாஜிஜதே எச்சரித்துள்ளார்.



ஈரான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துகிற அடுத்த சில நிமிடங்களியே ஈரானைச் சுற்றி அமெரிக்கா அமைத்துள்ள 35 ராணுவ தளங்களையும் நிர்மூலமாக்கக் கூடிய வகையில் ஏவுகணை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரானின் ஏவுகணைகள் இந்த தளங்களை சில நிமிடங்களில் சென்று தாக்கி அழித்து விடக் கூடியவை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்த ஒரு அமெரிக்க ராணுவ தளத்தையும் விட்டுவைக்கமாட்டோம்.



இதேபோல்தான் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலிய படைகளையும் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும். இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா ராணுவ தளங்களை அமைத்திருப்பது எங்களுக்கு அச்சுறுத்தல் அல்ல..இன்னும் சொல்லப்போனால் ஈரான் படைகள் தாக்குவதற்கான ஒரு “சந்தர்ப்பத்தை” யே அவைகள் ஏற்படுத்தியிருக்கின்றன என்றே கூறலாம் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக