//]]>3

ஞாயிறு, 8 ஜூலை, 2012

யாழ்ப்பாண மாவட்ட சனத்தொகை மதிப்பீடு தொடர்பில் சர்ச்சை


சனத்தொகை மதிப்பீட்டு புள்ளி விபரம்தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டம் தொடர்பான சனத்தொகை மதிப்பீடு தொடர்பில் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாண மாவட்டம் தொடர்பான சனத்தொகை மதிப்பீடு பிழையானது என தமிழ் அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 
யாழ்ப்பாண மாவட்ட தமிழ் மக்களின் எஎண்ணிக்கையில் பாரியளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறப்பிடப்படுகிறது.
 
யாழ்ப்பாண மாவட்டத்தில் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்ற போதிலும் புள்ளி விபரத் தரவுகளில் குறிப்பிடப்படும்தகவல் பிழையானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த மற்றும் இடம்பெயர்மக்கள் பற்றிய சரியான புள்ளி விபரங்கள் தெரியாது என்ற போதிலும், வெளியிடப்பட்டுள்ள எண்ணிக்கை பிழையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரும் சனத்தொகை மதிப்பீடு பிழையானது என தெரிவித்துள்ளார்.
 
ஒரு சில விடயங்கள் தொடர்பான தரவுகள் உண்மையைபிரதிபலிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தொழில்களுக்காக, பிள்ளைகளுக்கு நல்லபாடசாலை பெற்றுக் கொள்வதற்காக போன்ற பல்வேறு காரணிகளுக்காக சிலர் இவ்வாறுயாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவும் அவர்கள் பற்றிய தகவல்கள்உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறெனினும், பணியாளர்கள் தங்களால் முடிந்தளவு திறமையாகவே கடமைகளை ஆற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக