//]]>3

ஞாயிறு, 8 ஜூலை, 2012

சில இணையத்தளங்களை நடத்தி வரும் முக்கிய நபர் வெளிநாட்டில் தஞ்சம் கோர தயாராகிறார்


இலங்கை மக்களின் நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் விதத்தில், சிறிய அளவில் சில இணையத்தளங்களை நடத்தி வரும் முக்கியமான நபர் ஒருவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்று, வெளிநாடு ஒன்றில் தஞ்சம் கோர தயாராகி வருவதாக தகவல்கள் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிலுமின பத்திரிகை தெரிவித்துள்ளது.
 
இந்த நபர் நடத்தி வந்த சில இணையத்தளங்கள் இயங்கிய அலுவலகம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை புலனாய்வுப்பிரிவினரால் சோதனையிடப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து, குறித்த நபர் பாதுகாப்பு தரப்பினரிடம் சிக்காது மறைந்திருப்பதாகவும் சில ஊடக அமைப்புகளின் உதவியுடன் வெளிநாடு ஒன்றில் தஞ்சம் கோர தயாராகி வருவதாகவும் நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பிரபலமான நபர்களின் நற்பெருக்கு களங்கம் ஏற்படுத்துவது, அச்சுறுத்தி கப்பம் பெறுவது மற்றும் மக்கள் மனநிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட்டு, இணையத்தளங்களின் பாதாள உலக தலைவராக இந்த நபர் செயற்பட்டு வந்துள்ளார். இவருக்கு உதவி மேலும் சில நபர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ், ஸ்ரீலங்காமிரர் ஆகிய பல பெயர்களில் இணையத்தங்களை நடத்தி வந்த போதிலும் அவற்றில் எந்த இணையத்தளமும் இலங்கையில் பதிவுசெய்யப்படவில்லை எனவும் சிலுமின தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக