//]]>3

வெள்ளி, 20 ஜூலை, 2012

செலவு கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம்


இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனிநபர் ஒருவர் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்தபட்ஷம் 3,307 ரூபாவினை செலவு செய்ய வேண்டி இருந்தது. எனினும், இது மாவட்டங்களைப் பொறுத்து வேறுபட்டதுடன், தனிநபர் வாழ்க்கைச் செலவு ஆகக் கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம்(ரூபா.3,555) காணப்படுவதனை புள்ளிவிபரத் தரவுகள் காட்டுகின்றன.

இதற்கு, பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம் அதிகளவு இறக்குமதிப் பண்டங்களில் தங்கி இருப்பதும், அவற்றை கொண்டுவர ஏற்படும் தரகு மற்றும் போக்குவரத்து செலவுகளே யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலைவாசிகளை உயர்த்திவிட்டுள்ளதாக பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 
 
இவ்வாறு, இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ள முதல் மூன்று மாவட்டங்களைப் பட்டியல்படுத்தும் போது யாழ்ப்பாணம் (ரூபா.3,555), கொழும்பு (ரூபா.3,542) மற்றும் மட்டக்களப்பு (ரூபா.3,522) ஆகிய மாவட்டங்கள் காணப்படுகின்றன. இதேபோல, வாழ்க்கைச் செலவு மிகக் குறைந்து காணப்படும் முதல் மூன்று மாவட்டங்களாக மாத்தரை (ரூபா.3,178), அநுராதபுரம் (ரூபா.3,241) மற்றும் குருநாகல் (ரூபா.3,251) ஆகியன காணப்படுகின்றன.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக