//]]>3

வெள்ளி, 20 ஜூலை, 2012

13 வயது பாடசாலை சிறுமியை 73 வயது வதியோதிபர் பாலியல் பலாத்காரம்


மிகக் குறுகிய காலத்திற்குள் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகம் பதிவாகிய நாவலப்பிட்டிய பிரதேசத்தில் 13 வயது பாடசாலை சிறுமியை 73 வயது வதியோதிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்றும் தற்போது பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட 73 வயது வயோதிபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டிய நீதவான் தீப்தி கொடிதுவக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வயோதிபர் வசித்துவந்த பிரதேசத்திலேயே பாதிக்கப்பட்ட சிறுமியும் வசித்து வந்துள்ளார். பணம் உள்ளிட்ட பல பொருட்களை வழங்கி சுமார் ஒன்றரை மாத காலமாக சிறுமியை குறித்த வயோதிபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ளார்.
இதனால் மாணவியின் பாடசாலை வரவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்துள்ள பிரதேச மக்கள் கிராம அலுவலருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து நாவலப்பிட்டிய காவல்துறையில் முறையிடப்பட்ட பின்னர் வயோதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »