//]]>3

செவ்வாய், 15 மே, 2012

கள்ள காதலனுக்கு உல்லாசம் கொடுத்த பேராசிரியை கைது



ஜெரால்டு வில்லியம், 32 வயதாகும் பள்ளி ஆசிரியர். நேற்று முன்தினம் அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு கூடி, அவரை கொல்ல முயன்றுகொண்டிருந்த அவரது மனைவியான, தனியார் கல்லூரி பேராசிரியையும், அவரது கள்ள காதலனையும் மடக்கி பிடித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை யில் ஜெரால்டு வில்லியம், தனது மனைவியுடன் குடியிருந்திருக்கிறார். அவரது மனைவிக்கும் மணிகண்டன் என்ற வாலிபருக்கும் இடையில் கள்ள தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் கள்ள காதலன் மேல் கொண்ட மோகத்தால், பேராசிரியை கணவனுக்கு குளிர்பானத்தில் தூக்கமாத்திரை கொடுத்து தூங்கவைத்துவிட்டு, தனது கள்ள காதலனுடன் உல்லாசம் பகிர்ந்துள்ளார்.
நள்ளிரவில் மயாக்கம் தெளிந்த ஜெரால்டு வில்லியம், இவர்களின் அட்டூழியத்தை கண்டு கொதித்தெழுந்தார்.
உஷாராகிய பேராசிரியையும், அவரின் கள்ள காதலனும் அவரை கொல்லும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
இந் நிலையிலேயே, பொதுமக்கள் கூடியுள்ளனர். இந்த பரபரப்பால் அதிர்ந்து போன பேராசிரியை விஷத்தை குடித்துள்ளார்.
பொது மக்களால் காப்பாற்றப்பட்டு பேராசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை முயற்சியில் பாதிக்கப்பட்ட ஜெரால்டு வில்லியம் உம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
கள்ள காதலன் 15 நாள் விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவையில் சிவலிங்கம் திருட்டு


பொலன்னறுவை வரலாற்றுப் சிறப்புமிக்க சிவன் கோயிலில் இனந்தெரியாத புதையல் கொள்ளையர்களால் பாரிய சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 

புதையல் கொள்ளையர்களால் குறித்த சிவன் கோயிலில் இருந்து 4 அடி உயரமுடைய சிவலிங்கமொன்று களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கொள்ளை குறித்து விசாரணை நடத்த விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

ஒரே சூழில் இரு ஆண் குழந்தைகளை பெற்ற 14 வயது சிறுமி!




மாத்தளை - கவேவெல - தேவஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் ஒரே சூழில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

14 வயதுடைய குறித்த சிறுமி தான் வசிக்கும் பிரதேச இளைஞர் ஒருவருடன் காதல் புரிந்து வந்துள்ளார். 

இதனை அறிந்த பெற்றோர் அவர்களுடைய காதலுக்கு அனுமதி அளித்ததோடு இவ்விருவரையும் கணவன் - மனைவியாக வாழவும் அனுமதித்துள்ளனர். 

இதன் விளைவாக குறித்த 14 வயது சிறுமி கர்ப்பமாகி கடந்த 8ம் திகதி மாத்தளை வைத்தியசாலையில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். 

பிறந்த குழந்தைகள் நிறை குறைவாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த விடயம் குறித்து கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

யாழில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் தீவிர போராட்டம்



ஊளியர் சேமலாபநிதியியை வளங்காமையாலும், 180 ஊளியர்களை வேலையில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து டெனிஸ் மிதிவெடி அகற்றும் பணியாளர்கள் டெனிஸ் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தை முற்றுகையிட்டனர் 

இன்று காலை 9.30 மணிக்கு சுண்டுக்குளியில் உள்ள டெனிஸ் மிதிவெடி அகற்கும் நிறுவனத்திற்கு காலையில் பணிக்காக வந்ததும் அங்கு 180 பெயரை பணியில் இருந்து நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

ஊளியர்கள் தமது ஒப்பந்தக்காலம் இந்தவருடம் 6 மபதம் 31 திகதி வரை உள்ளபோது இவ்வாறு இடைநீக்குவதானால் தங்களிற்குரிய மிகுதிப்பணமும் 2 வருடங்களுக்கு மேலாக வளங்கப்படாத ஊளியர் சேமலாபநிதியினையும் வளங்கு மாறு கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 

ஆளும், எதிர் தரப்புப் பேச்சுவார்த்தை..




ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று 14ம் திகதி அலரி மாளிகைக்கு விஜயம் செய்து அங்கு ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சி குழுவை சந்தித்து நாட்டின் சமகால அரசியல் நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 

இந்த சந்திப்பில் ஐதேக சார்பில் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க ஆகியோரும், 

அரசாங்க தரப்பு சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகப்பெரும நிமல் சிறிபால டி சில்வா, பசில் ராஜபக்ஷ், மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் கலந்து கொண்டனர். 

முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல சுவரொட்டிகள்



யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூரும் வகையில் நேற்றிரவு யாழ். பல்கலைக்கழக சதுக்கத்தில் பல்வேறு இடங்களில் சிங்கள இனவாத அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து சுவரொட்டிகளை மேற்கொண்டனர் .
பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்றழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் இந்த சுவரொட்டி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வலிகள் தந்த வாரம் எனும் தலைப்பில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல!
வலிகளை வாழ்வாக்கி கனவுகளை நனவாக்குவோம்!
உரிமைக்காய் குரல் கொடுப்போம்! நீதிக்காய் போராடுவோம்!
உயிர்கள் அழிந்து போனாலும் உணர்வுகள் அழியப்போவதில்லை!
தமிழர்களின் உரிமைக்குரல் சர்வதேசத்தின் துணையோடு ஒடுக்கப்பட்ட நாள்!
என தமது விடுதலை வேணவாவை மற்றும் உணர்வை உயிரூட்டும் முகமாக சுவரொட்டிகளை வெளிப்படுத்தினர்.
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் சிங்கள அரசும் அதன் துணைக்குழுக்களும் முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக புலம்பெயர் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு மேற்கொள்ளும் பரப்புரையின் காரணமாக புலம்பெயர் மக்களின் விருப்பு மட்டும் தான் தமிழீழம் என்ற வெளிநாடுகளின் பொதுவான கருத்தை உடைத்தெறிந்து தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் அதன் அடிப்படையில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு,
விடுதலை வேண்டும் என்பது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அரசியல் வேணவா என்பதை நிரூபிக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமது விடுதலை உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
அத்தோடு புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களாகிய எம்மை தாயக உறவுகளிடம் இருந்து தனிமைப்படுத்த எடுக்கும் சிங்கள அரசின் அரசியல் சதியையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது ஒரு மக்கள் போராட்டம் என்ற உண்மையை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோடிட்டுக்காட்டியுள்ளார்கள்.
கருத்துச் சுதந்திரம் பேணப்படாத நாட்டில் சிங்கள அரசின் அடாவடித்தனமான எவ்வித காட்டுமிராண்டித்தனமான விரட்டலுக்கும் அஞ்சாமல் தமிழின தன்மானத்தோடு தாயகத் தமிழர்களின் கருத்தை ஒருமித்து நிலைநாட்டி பல்கலைக்கழக மாணவர் சமூகத்தை பிரநிதித்துவப்படுத்தும் அனைவருக்கும் புலம்பெயர் ஈழத்தமிழராகிய நாம் தலைவணங்குகிறோம்.

திங்கள், 14 மே, 2012

நீரழிவு நோய்க்கு சிறந்த மருந்து அவரை



கொடிவகைகாய்களில் சிறந்தது அவரைக்காயாகும். சிக்கனமானவிலையில் நிறைந்த ஊட்டச்சத்தை இந்தஅவரைக்காய் தருகிறது.இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்துமற்றும் சில விட்டமின் சத்துகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் காய் அவரைக்காயாகும்
.
இதில் பிஞ்சுக்காயே சிறந்ததாகும். மிகஎளிதில் செமிக்கக்கூடிய காய்களில் அவரையும் ஒன்று. அதனால் பலவீனமான குடல் உள்ளவர்களும்மத்தியான நேரத்திலும் இரவு நேரத்திலும் இதை உண்ணலாம்.

வெண்மையான அவரைகாய் வாயுவையும் பித்தத்தையும் கண்டிக்கவல்லது. இது உள்ளுறுப்புகளின் அளர்ச்சியையும் எரிச்சலையும் போக்கும் தன்மை உள்ளது.இதை உணவில் சேர்த்து உண்பதால் நீரழிவு நோய், பேதியாகும்தொல்லை, அடிக்கடி தலைநோய் வருதல், ஜீரணம் சம்பந்தப்பட்ட கோளாறு முதலியவற்றைக்கட்டுப்படுத்தும் என்று வைத்தியநூல்கள் கூறுகின்றன.அண்மைய ஆராச்சிகளின்படி இரத்தக்கொதிப்பைக் கட்டுப்படுத்தும் சக்தி அவரைக்காய்க்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

2 தலை 6 கால் விநோத ஆமை



இரண்டு தலைகள் மற்றும் ஆறு கால்களுடன் விநோத ஆமை ஒன்று உக்ரேன் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து வயதாகும் இவ் ஆமை ஆசிய ஆமை வகையை சேர்ந்ததாகும். தற்பொழுது இவ் ஆமை மக்கள் பார்வைக்காக உக்ரேனில் உள்ள மியூசியம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
இவ் ஆமைக்கு இரண்டு தலை, இரண்டு இதயம் இருப்பதால், இவை ஒட்டிப்பிறந்த இரட்டை ஆமைகள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நயன்தாரா பண கடத்தல் விவகாரம் பீதியில் பிரபல நடிகைகள்


நயன்தாரா வெளிநாடு சென்று விட்டு திரும்பிய போது விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினார். அவர் ரூ.20 லட்சத்தை வெளிநாட்டுக்கு எடுத்து சென்றதாகவும்அந்த பணத்தை எதற்காக கொண்டு சென்றீர்கள் என்று அதிகாரிகள் கேள்விகளால் துளைத்ததாகவும் செய்தி வெளியானது.
40 நிமிடம் நயன்தாராவிடம் விசாரணை நடந்ததாக கூறப்பட்டது. இது சக நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.
அத்துடன் தங்கள் கணக்குகளை ஆடிட்டர் வைத்து ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பான முறையில் எப்படி முதலீடு செய்வது என்றும் விசாரித்து அறிகின்றனர்.
நடிகை திரிஷா கூறும்போது எனது பண விவகாரங்களை என் அம்மா பார்த்துக் கொள்கிறார். எதில் முதலீடு செய்வது என்பதையும் கவனமாக முடிவு செய்கிறோம். சேமிப்பு என்பது முக்கியத்துவம் அப்போதுதான் வரும் காலத்தில் இதுபோன்று வாழ முடியும் என்றார்.
நடிகை சினேகா சமீபத்தில் தனது திருமண மண்டபத்தை விற்றார். திருமண செலவுக்காக அதை விற்றதாக கூறப்பட்டது. ஆனால் சினேகா அதை மறுத்தார். வேறு காரணத்துக்காக விற்றேன் என்றார். நமீதா சம்பாத்தியம் முழுவதையும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்.
அடுக்குமாடி வீடுகள் கட்டியும் விற்கிறார். கணக்கு விவகாரங்களை ஆடிட்டர் வைத்து கவனித்து கொள்கிறார்.

இரகசிய தடுப்பு முகாமின் இரகசியங்கள் திறக்கப்படுகிறதாம்



இலங்கையில் போர் முடிவுற்று 3 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், தாம் தடுத்துவைத்துள்ள போர் கைதிகள் குறித்த விபரங்களை வெளியிட தயார் என இலங்கை பாதுகாப்புச் செயலகம் முதல் தடவையாக தெரிவித்துள்ளது. 
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில், சரணடைந்த புலிகளின் உறுப்பினர்கள் பலரையும் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பலரையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என செய்திகள் வெளிவந்தது அறிந்ததே 
இதில் பலர் காயங்களுடன் இலங்கை இராணுவத்தினரிடம் அகப்பட்டனர். அவர்களின் நிலை என்ன ஆயிற்று என்று இதுவரை இலங்கை அரசு தெரிவித்தது இல்லை. குறிப்பான புலிகளின் மூத்த உறுப்பினர்களான பேபி சுப்பிரமணியம், யோகி, பாலகுமார் மற்றும் இராணுவப் பிரிவைச் சேர்ந்த கடாபி போன்றவர்களை இலங்கை அரசு என்ன செய்தது என்பது இதுவரை அறியப்படவில்லை.
இது இவ்வாறிருக்க, போரின்போது தம்மால் கைதுசெய்யப்பட்டு இரகசிய தடுப்பு முகாமில் உள்ள அனைவரது விபரங்களையும் தாம் வெளியிட தயார் என நேற்றையதினம்(ஞாயிறு) பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 
தம்மால் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களின் உறவினர்கள், தம்மை அணுகி இவர்கள் குறித்து விபரங்களை கோரும் பட்சத்திலேயே, அந்தநபர்கள் தொடர்பான விபரங்களை தாம் வெளியிடுவோம் என கோத்தபாய தலைமையில் இயங்கும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன
எனவே இரகசிய தடுப்பு முகாமில் உள்ள நபர்களின் உறவினர்கள், தயக்கமின்றி இலங்கை அரசிடம் தமது உறவுகள் தொடர்பான விபரங்களைக் கோருவது நல்லது. இதனூடாகவே, இரகசிய தடுப்பு முகாம்களில் யார் யார் எஞ்சியுள்ளனர் என அறியமுடியும்.


வயது வந்தோருக்கான வீடியோவில் தன் மனைவி தோன்றியதால் அதிர்ந்த கணவர்!


மனைவிக்கு தெரியாமல் நெட்கஃபே களில் வயதுவந்தவர்களுக்கான வீடியோவை பார்ப்பதை வழக்கமாக கொண்ட நபர் ஒருவர், குறித்த வீடியோ ஒன்றில் தன் மனைவி தோன்றியதால் நெட்கஃபே இல் மயங்கி விழுந்த சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது.
ரமடான் என்ற நபரே குறித்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தவராவார்.
இது குறித்து எகிப்த் உள்நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ரமடான், தன் மனைவி அவளது காதலனுடன் உறவு கொண்ட வீடியோவை இணையதளம் ஒன்றில் பார்த்து தான் அதிர்சியடைந்ததாகவும், இது தொடர்பில் மனைவியிடம் கேட்ட போது, எனக்கு உன்னை பிடிக்கவில்லை, அவனை தான் பிடித்திருக்கிறது என்று சர்வ சாதாரணமாக பதிலளித்தது தனது 16 வருட மண வாழ்வை அர்த்தமற்றதாக்கியுள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.
இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி கிழக்கு கடலில் அத்துமீறி மீன்பிடிப்பு


வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட சில தொழில்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள பிரதேச மீனவர்கள், இதற்கு கடற்படையினர் உடந்தையாக இருந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தக்  கடற்பகுதியில் சுண்டிக்குளத்திற்கு அப்பால் கேவில் பகுதி கடற்பரப்பிற்குள் நுழையும் சிங்கள மீனவர்கள், பெருமளவில் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர்.
எனினும் இது குறித்துக் கடற்படை எந்த விதமான நடவடிக்கையினையும் எடுத்திருக்க வில்லை. இந்த நிலையில் தமிழ் பிரதேச மீனவர்களின் தொழில் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக தொடர்ந்தும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இது குறித்து மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின், மாவட்ட பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி கூறுகையில்,
கடற்றொழில் அமைச்சினால் அட்டை பிடிப்பதற்கென சில கம்பனிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் எமது பகுதி கடற்றொழிலாளர் சங்கங்களின் அனுமதியை பெறவேண்டும். அதேபோன்று எமது பகுதி மீனவர்களின் படகுகளையும், மீனவர்களையும் கூட பயன்படுத்த வேண்டும். மேலும் கரையிலிருந்து 20 கிலோமீற்றர் அப்பாலே தொழில் செய்ய முடியும், இந்த அடிப்படையில்தான் அமைச்சு அனுமதியை வழங்கியிருந்தது.
ஆனால் இதற்கு எமது பகுதி கடற்றொழிலாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் கடுமையாக எதிர்த்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
இதனால் அனுமதி வழங்கப்பட்ட கம்பனிகள் திரும்பிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இவ்வாறு வெளியேறியவர்களே சில தடைசெய்யப்பட்ட தொழில்களில் ஈடுபடுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர் என்றார்.

The Expendables 2 மிரட்டலான அதிரடி ட்ரெய்லர் வெளியீடு (வீடியோ இணைப்பு)



The Expendables 2, கோலிவூட்டில் தயாராகிவரும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாகும். Lions Gate Entertainment தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இத் திரைப்படத்தை Simon West இயக்குகிறார்.
வரும் ஆகஸ்ட் 17 திரையிடப்படவுள்ள இத் திரைப்படத்தில் Sylvester Stallone, Jason Statham, Jet Li,Dolph Lundgren, Chuck Norris, Randy Couture, Terry Crews, Liam Hemsworth, Jean-Claude Van Damme, Bruce Willis, மற்றும் Arnold Schwarzenegger ஆகியோர் நடித்துள்ளனர்.
நவீன ஆயுதங்களின் வெடிப்பு சத்தங்களோடு படமாக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படத்தில் ஜெட் லீ நடிப்பதால் மரபு ரீதியான உடல் சண்டைக்கும் குறைவிருக்காது.
இத் திரைப்படம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சச்சினுக்கு தங்க பேட்



சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மேற்கு வங்காள மாநில அரசும், பெங்கால் கிரிக்கெட் சங்கமும் இணைந்து பாராட்டு விழா நடத்துகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை நடக்கும் ஆட்டத்திற்கு முன்பாக இந்த விழா நடக்கிறது.
விழாவில் மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு டெண்டுல்கருக்கு தங்கபேட்டும், பந்தும் வழங்கி கௌரவிக்கிறார்.

ரயிலிலிருந்து பாய்ந்த காதல் ஜோடி காதலி பலி!


வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சனிக்கிழமை இரவு புறப்பட்ட புகையிரதத்தில் இருந்து காதல் ஜோடி ஒன்று பாய்ந்ததில் பெண் பலியானதுடன் ஆண் இரு கால்களையும் இழந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இரவு 11 மணிக்கு புகையிரதம் சென்றுகொண்டிருக்கும் போது இவர்கள் புகையிரதத்தில் இருந்து பாய்ந்துள்ளனர். பெண்ணின் மரணம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவியை தாக்கிய ஆசிரியை கைது!


மாணவியொருவரை குடையால் தாக்கியதால் சிறுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மினுவாங்கொட நாலந்த மகளீர் பாடசாலையின் ஆசிரியை ஒருவரை பொலிஸார் கைதுசெய்தனர்.
சம்பவத்தில் பாடசாலையில் கல்விபயிலும் 12ஆம் ஆண்டு மாணவியே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
காசோலை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடே சம்பவத்திற்கு காரணம் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸார் ஆசிரியை கைதுசெய்த போதிலும் இரு தரப்பினரும் சமரசம் செய்துகொண்டதை அடுத்து ஆசிரியை விடுவிக்கப்பட்டார்.

பேலிய கொடையில் விபச்சார விடுதி முற்றுகை!



கொழும்பு – பேலியகொடையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இளம் பெண்கள் 6 பேரும் அவர்களை நிர்வகித்துவந்த முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 முதல் 30 வயதிற்கிடைப்பட்ட பெண்களே கைதாகியுள்ளனர். இவர்களைப் பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்களிடம் 2000 முதல் 5000 ரூபா வரை அறவிடப்பட்டுவந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேலியகொடை குற்றவியல் பிரிவினரால் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட இவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பாலிவூட்டின் சிறந்த அம்மாவாக ஐஸ்வர்யாராய்



கருத்துக்கணிப்பு ஒன்று மூலம் பாலிவூட்டின் சிறந்த அம்மாவாக ஐஸ்வர்யா ராய் தேர்வாகியுள்ளார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு பாலிவூட்டின் சிறந்த அம்மா யார்? என்ற கருத்துக்கணிப்பை இந்தியாவின் பிரபல திருமண சேவை இணைய நிறுவனம் ஒன்று நடாத்தியிருந்தது.
அக் கருத்துகணிப்பின் முடிவில் சிறந்த அம்மாவாக ஐஸ்வர்யா ராய் தேர்வாகியுள்ளார். இக் கருத்துக்கணிப்பில் ஐஸ் 54 வீத வாக்குக்களை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் 27 வீத வாக்குக்களை பெற்று கரீஸ்மா கபூர் தேர்வாகியுள்ளார்.
ஏனைய இடங்களை 11 வீத வாக்குகளை பெற்ற மாளிகா அரோரா கான், 8 வீத வாக்குகளை பெற்ற லாரா டுட்டா ஆகியோர் பிடித்துள்ளனர்.

ஈபிள் டவர் போன்று லண்டனில் 376 அடி உயர ஒலிம்பிக் கோபுரம்



பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஈபிள் கோபுரம் உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் இது அந்த நகரின் அடையாள சின்னமாகவும் விளங்குகிறது. 
அதுபோன்று லண்டன் நகரிலும் ஒரு வித்தியாசமான கோபுரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. லண்டனில் ஜூலை மாத இறுதியில் ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. அதை நினைவுப்படுத்தும் வகையில் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளதால் ஒலிம்பிக் கோபுரம் என அழைக்கப்படுகிறது.
376 அடி (115 மீட்டர்) உயரமுள்ள இந்த கோபுரம் சுருள் வடிவில் வித்தியாசமாக 
வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓவியர் அனீஷ்கபூர், என்ஜினீயர் சிசில் பால்மாண்டு ஆகியோர் இதை வடிவமைத்துள்ளனர். இந்த கோபுரம் 2 தலங்களை கொண்டதாக வடிவ மைக்கப்பட்டுள்ளது. 455 வளைவான மற்றும் சுருளான படிக்கட்டுகள் உள்ளன. இங்கு உணவகங்கள் அமைக்கப்படு கின்றன. இந்த கோபுரம் ஒலிம்பிக் விளையாட்டு மைதானம் அருகே கட்டப்பட்டுள்ளது.
எனவே, இதில் ஏறி பார்த்தால் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை துல்லியமாக ரசிக்க முடியும். எனவே, இந்த கோபுரத்தில் ஏறி உள்ளே சென்று பார்க்க ரூ.1000 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரம் கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த கோபுரம் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இதை பலர் ஈபிள் கோபுரத்துக்கு இணையாக பாராட்டுகின்றனர். ஒரு சிலரோ இந்த கோபுரத்தை பார்க்க சகிக்கவில்லை என அங்கலாய்க்கின்றனர்.

ஞாயிறு, 13 மே, 2012

அமெரிக்க தூதரகத்தில் போராளி தஞ்சம்-கருணா மீது தற்கொலை தாக்குதல் நடத்த வந்தவர்


கடந்த இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு JEEVARATNAM ; DOB: AUGUST 25th 1983 KATTANKUDDY, Batticaloa, Sri Lanka; National Identity Card Number: 832383171V.
என்ற அடையாளத்தை தரித்த போராளி ஒருவர் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்ற போது அவர் மீது தற்கொலைதாக்குதலை நடத்தி அவரை கொலை செய்யும் படி புலிகள் பணித்திருந்தனர் .
அதை அடுத்து அவர் மீது தாக்குதல் நடத்தும் நோக்குடன் அனுப்பி வைக்க பட்ட நபர் தாக்குதலை நடத்தாமல் அமெரிக்கா தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார் .இவை தொடர்பான செய்தியினை உடனடி விரைந்து வசிங்கடனுக்கு தெரிய படுத்த பட்டுள்ளது .
தனது பதின் ஐந்தாவது வயதில் போராட்டத்தில் இணைந்த நபர் இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு கரும்புலிகள் அணியில் இணைத்துபயிற்று விக்க பட்டார் .ஆறுமாத காலங்களாக கருபுலி தாக்குதல் அணிகள் பயிற்சி இடம் பெற்றுள்ளது .நாள் இரண்டு மணித்தியாலங்கள் என வழங்க பட்டு வந்துள்ளது .
இந்த செய்தியினை கொழும்பு தூதரகம் வசிங்கடனுக்கு அனுப்பி வைக்க பட கேபிள் குறிப்பினை கையபடுத்திய விக்கிலீக்ஸ்இந்த பரபரப்பு செய்தியினை வெளியிட்டுள்ளது .
இவர் டக்கிலஸ் மீது தாக்குதல் நடத்த அனுப்பி வைக்க பட்டிருந்தார் என அதில் சுட்டி காட்ட பட்டுள்ளது !

கையில் ஓட்டை போட்டு ஐ பொட் ஐ பொருத்திய இளைஞன்



தற்போது அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. ஐ போன் வாங்குவதற்காக தனது சிறுநீரகத்தை விற்ற இளைஞன், தனது கற்பை விலை பேசிய பெண் என பலரை பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த டாட்டூ கலைஞர் ஒருவர், அவருக்கு ஐ பொட் எப்போதும் தன்கூடவே இருக்க வேண்டும் என்று விருப்பமாம். கையில் வார் கொண்டு இணைக்க விரும்பாத இவர், வில்லங்கமான ஓர் முயற்சியில் இறங்கினார்.
கை மணிக்கட்டில் துளை போட்டு அதில் வலிமையான காந்த நட்டுக்களை பொருத்தி, அதிலே ஐ பொட் ஐ பொருத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பயணம் செய்யும் விமானத்தின் உட்புறம் எப்படி இருக்கும்?



அமெரிக்க ஜனாதிபதி பயணம் செய்யும் உத்தியோகபூர்வ விமானமாக எயார்ஃபோஸ் வன் (AirForce One) பயன்படுகிறது.
அதிஉயர் சொகுசு வசதி செய்யப்பட்ட இவ் விமானம் அதி உச்ச பாதுகாப்பு வலையமைப்பை உள்ளடக்கியுள்ளது.
இவ் விமானத்தை பராமரிக்க மணித்தியாலத்துக்கு £116,000 செலவாகிறது. மேலும் இதில் 87 தொலைபேசிகள், 19 தொலைக்காட்சிகள், ஜிம், ஆடம்பர ஹொட்டெல் என்பனவும் உள்ளன
இவ் விமானத்தின் உட்பாகம் எப்படி இருக்கும்?

சில திருமணமான பெண்கள் கள்ளக் காதலனை நாடுவது ஏன்?



திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம்.
தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அது போகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.
ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.
தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்

5 நாட்களுக்கு மூடப்படும்! காலி வீதி


நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த மே மாதம் 19ஆம் திகதி வெற்றி விழா கொண்டாட்ட பேரணியை நடாத்தும் பொருட்டு காலி வீதி மூடப்படவுள்ளது.
காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திற்கும் பழைய பாராளுமன்றக் கட்டிடத்திற்கும் இடையிலான வீதி அவ்வப்போது மூடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாளை மே 14ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையான ஐந்து நாட்களுக்கு பாதை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நாட்களில் காலை 6.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையான காலப்பகுதிகளில் அவ்வப்போது பாதை மூடப்படவுள்ளது.
இதன் போது மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றனர்.

விடுதலையான தமிழ் பெண் மீண்டும் சிறையில்..!



பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வெலிக்கடைச் சிறையில் கடந்த நான்கு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண் ஒருவர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவரைப் பொறுப்பேற்க யாரும் இல்லாமையால் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பிவைக்கப்பட்ட பரிதாப நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றிருக்கின்றது.
மட்டக்களப்பு, செங்கலடி உமா மில் ரோட்டைச் சேர்ந்த சிவராணி சந்திரகுமார் என்ற 30 வயதான பெண்ணுக்கே இந்த பரிதாபம் நிகழ்ந்திருக்கின்றது.
 2008 ஆகஸ்ட் 29ம் திகதி, குடும்ப கஷ்ட நிலை காரணமாக கொழும்பில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து பஸ்ஸில் வந்துகொண்டிருந்த போதே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், பாதுகாப்புப் படையினருடைய கடுமையான சித்திரவதைகளின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
 கடந்த நான்கு வருடங்களாக சிறையில் கடுமையான சித்திரவதைக்கும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்ட இவர், அதனால் தற்போது ஒரு மனநோயாளியாகியிருப்பதாக இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் திகதி இவர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும், அவரைப் பொறுப்பேற்பதற்கு யாரும் முன்வராததால் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் கடந்த 8ம் திகதி குறித்த பெண்ணை மீண்டும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரது மனோநிலையைக் கருத்திற்கொண்டு அவரை அங்கொடை மனநோயாளர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும் அவர் மோசமாக மனநிலை பாதிக்கப்பட்டிருப்தனால், அவரது நலன்களைக் கவனிப்பதற்காக யாரும் முன்வராமையால் அவரை அனுமதிக்க மருத்துவமனை வட்டாரம் மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது.
இந்த நிலையில் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள அவரது உறவினர்களைக் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
எனவே குறித்த இந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பி தேகாரோக்கியத்துடனும் மன நலத்துடனும் வாழ்வதற்கு சமூக பொதுநல அமைப்புகள், மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புகளை முன்வர வேண்டுமென அரசியல் கைதிகளின் வெலிக்கடை பெண்கள் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிலிம்பேர் பெற்ற தமிழ் நடிகர்களின் முழுமையான விபரம்



1972 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவில் பிலிம்பேர்விருது பெற்றவர்களும், அவர்கள் தேசிய விருது பெற காரணமான திரைப்படங்களின் விபரங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
2010 விக்ரம் – ராவணன்
2009 பிரகாஷ் ராஜ் – காஞ்சிவரம்
2008 சூர்யா – வாரணம் ஆயிரம்
2007 கார்த்தி – பருத்திவீரன்
2006 அஜித் குமார் – வரலாறு
2005 விக்ரம் – அந்நியன்
2004 சூர்யா – பேரழகன்
2003 விக்ரம் – பிதாமகன்
2002 அஜித் குமார் – வில்லன்
2001 விக்ரம் – காசி
2000 கமல்ஹாசன் – ஹே ராம்
1999 அஜித் குமார் – வாலி
1998 சரத்குமார் – நட்புக்காக
1997 சரத்குமார் – சூர்யவம்சம்
1996 கமல்ஹாசன் இந்தியன்
1995 கமல்ஹாசன் – குருதிப்புனல்
1994 சரத்குமார் – நாட்டாமை
1993 கார்த்திக் – பொண்ணு மணி
1992 கமல்ஹாசன் – தேவர் மகன்
1991 கமல்ஹாசன் – குணா
1990 கார்த்திக் – கிழக்கு வாசல்
1989 கார்த்திக் – வருஷம் பதினாறு
1988 கார்த்திக் – அக்னி நட்சத்திரம்
1987 சத்யராஜ் – வேதம் புதிது
1986 விஜயகாந்த் – அம்மன் கோவில் கிழக்காலே
1985 சிவாஜி கணேசன் – முதல் மரியாதை
1984 ரஜினிகாந் – நல்லவனுக்கு நல்லவன்
1983 பாக்யராஜ் – முந்தானை முடிச்சு
1982 மோகன் – பயணங்கள் முடிவதில்லை
1981 கமல்ஹாசன் – ராஜ பார்வை
1980 சிவகுமார் – வண்டி சக்கரம்
1979 சிவகுமார் – ரோசாப்பூ ரவிக்கை காரி
1978 கமல்ஹாசன் – சிகப்பு ரோஜாக்கள்
1977 கமல்ஹாசன் – பதினாறு வயதினிலே
1976 கமல்ஹாசன் – ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
1975 கமல்ஹாசன் – அபூர்வ ராகங்கள்
1974 ஜெமினி கணேசன் – நான் அவனில்லை
1973 சிவாஜி கணேசன் – கெளரவம்
1972 சிவாஜி கணேசன் – ஞான ஒளி

பேஸ்புக் அறிமுகப்படுத்தவுள்ள புதிய வசதி!



இணைய மற்றும் சமூகவலையமைப்பில் பல புதுமைகளைப் புகுத்திய நிறுவனங்களில் பேஸ்புக்கும் ஒன்று. 

இந்நிலையில் பேஸ்புக் தனது பாவனையாளர்களுக்கென அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களைப்போல 'எப் ஸ்ட்ரோர்' ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளது.

இதனூடாக பேஸ்புக் பாவனையாளர்கள் அப்ளிகேஷன்களைக் கொள்வனவு செய்யமுடிவதுடன், டெவலப்பர்கள் தங்களது அப்பிளிகேஷன்களை விற்பனை செய்யவும் முடியும். 

அப்பிளின் 'ஐ டியூன்ஸ்', கூகுளின் 'பிளே' ஆகிய 'எப் ஸ்டோர்களைப் போலவே பாவனையாளர்கள் பேஸ்புக்கின் 'எப் ஸ்டோரில்' உள்ள அப்ளிகேஷன்களையும் தரப்படுத்த முடியும். 

இதில் மொபைல் மற்றும் கணனிகளுக்கான அப்ளிகேஷன்களும் விற்பனை செய்யப்படவுள்ளன. 


இதன்மூலம் பேஸ்புக்கின் 900 மில்லியன் பாவனையாளர்களும் நன்மையடைவர் என அந்நிறுவனம் தெரிவிக்கின்றது. 

இதேவேளை பேஸ்புக்கின் வருவாய் தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

பேஸ்புக்கினைக் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் போன்ற மொபைல் சாதனங்களின் ஊடாக உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையே இதற்கான பிரதான காரணமாகும். 

மொபைல் சாதனங்களில் குறைந்தளவு விளம்பரங்களையே பேஸ்புக்கினால் வழங்கமுடியும், சாதாரண கணனிகளுடன் ஒப்பிடும் போது இது மிகக்குறைவு. 

பேஸ்புக்கின் வருவாயில் பெருந்தொகை, விளம்பரங்களின் மூலமே கிடைக்கப்பெறுகின்றது. 

தற்போது குறைந்துவரும் வருவாயை ஒருவாறு ஈடுகட்டும் முகமாகவே பேஸ்புக் ' எப் ஸ்டோரினை' ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ___

துறைமுக விரிவாக்கப் பணியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி



கொழும்பு துறைமுகத்தை விரிவாக்கும் செயற்திட்டத்தை பார்வையிடுவதற்கு இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமையவே இச்சந்தர்ப்பம் பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்றும் நாளையும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் பார்வையிட முடியும். ___

நித்தியானந்தாவின் ஆனந்தம் புதிய தொலைக்காட்சி



நித்தியானந்தா தன் அடுத்த முயற்சியாக ஆனந்தம் என்ற பெயரில் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற சர்ச்சை ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க மறுபுறம் தன் ஆன்மிக சீடர்களை குஷிப்படுத்த நித்யானந்தா தயாராகி வருகிறார். 


ஆன்மிக தகவல்கள் அடங்கியதாக அந்த அலைவரிசை அமையவுள்ளது. அதற்கான உறுதிப்பத்திரம் பெற்றுள்ள நிலையில் விரைவில் பரீட்சார்த்த ஒளிபரப்பு தொடங்க உள்ளது. 

'எதிர்வரும் ஜனவரியில் ஆனந்தம் ஒளிபரப்பு தொடங்கும். அதற்கான வேலைகள் நடக்கின்றன. நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆன்மிக அன்பர்களுக்கு விருந்தாக இருக்கும்" என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். ___


சாவகச்சேரியில் வெடிவிபத்து - சிறுவனொருவன் காயம்



சாவகச்சேரியில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளார்.

இந்த வெடிச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

குறித்த சிறுவன் தாயுடன் விறகு வெட்ட சென்ற வேளையிலேயே இந்த வெடிச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வெடிச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு நேட்டோ மாநாட்டில் பங்கேற்க அழைப்பில்லை



ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து விவாதிக்க அமெரிக்காவிலுள்ள சிக்காகோ நகரில் எதிர்வரும் 20ஆம் 21ஆம் திகதிகளில் நேட்டோ மாநாடு நடைபெறவுள்ளது. அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பாகிஸ்தான் சார்பில் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, இராணுவத் தளபதி கயானி ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த மாநாட்டிற்கு பாகிஸ்தானுக்கு அழைப்பில்லை என்று நேட்டோ பொதுச் செயலாளர் ராஸ்முசென் அறிவித்துள்ளார். கடைசி நேரத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். 

கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், மொராக்கோ உட்பட 60 நாட்டுப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்கள். ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளும் அழைக்கப்படவில்லை. பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிருப்தி அடைந்திருப்பதே அழைப்பு விடுக்காமைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.