//]]>3

ஞாயிறு, 13 மே, 2012

பாகிஸ்தானுக்கு நேட்டோ மாநாட்டில் பங்கேற்க அழைப்பில்லை



ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து விவாதிக்க அமெரிக்காவிலுள்ள சிக்காகோ நகரில் எதிர்வரும் 20ஆம் 21ஆம் திகதிகளில் நேட்டோ மாநாடு நடைபெறவுள்ளது. அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பாகிஸ்தான் சார்பில் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, இராணுவத் தளபதி கயானி ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த மாநாட்டிற்கு பாகிஸ்தானுக்கு அழைப்பில்லை என்று நேட்டோ பொதுச் செயலாளர் ராஸ்முசென் அறிவித்துள்ளார். கடைசி நேரத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். 

கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், மொராக்கோ உட்பட 60 நாட்டுப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்கள். ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளும் அழைக்கப்படவில்லை. பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிருப்தி அடைந்திருப்பதே அழைப்பு விடுக்காமைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக