//]]>3

சனி, 12 மே, 2012

பங்களாதேஷில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் புனித கேசங்கள் மக்கள் பார்வைக்காக




ஜானாதிபதி மகிந்த ராஜபக்ஷ்வின் ஆலோசனைக்கமைவாக பங்களாதேஷில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் புனித கேசங்களை மக்களின் பார்வைக்காக கொழும்பு கங்காராம விகாரையில் வைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து, கால் நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமைவாக ஹட்டன் பிரதேச மக்களின் பார்வைக்காக நேற்று கொழும்பிலிருந்து விமானம் மூலமாக புனித கேசங்களை எடுத்துவரப்பட்டன.
புத்த பெருமானின் புனித கேசங்கள் ஹட்டன் நிக்ரோதாமராமய விகரையில் நேற்றும், இன்றும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக