வவுனியா பம்பைமடுப் பகுதியில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமானப்படைத் தளம் ஒன்றை நிறுவும் முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு அந்தப் பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வவுனியா நகரில் பல ஏக்கர் விஸ்தீரமான நிலப்பரப்பில் விமானப்படை முகாம் ஒன்று இயங்கி வரும் நிலையில் இராணுவத்தினர் மேலும் ஒரு விமானப்படைத்தளத்தை அமைக்கும் முயற்சியானது பலதரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக வவுனியா தெற்கு பிரதேசபை தொடர்பு கொண்டு கேட்டபோது;
“வவுனியா தெற்குப் பிரதேசத்திலுள்ள பம்பைமடு எல்லைக்குள் உத்தேச விமானப் படைத் தளம் அமைந்திருப்பதால்பிரதேசபை அனுமதியைக் கேட்டிருந்தனர். ஆனால் பிரதேச சபை அனுமதியை வழங்கவில்லை.
அந்தப் பகுதியில் பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கும், அருகில் கலாசார மண்டபம் ஒன்றை நிறுவுவதற்கும் பலரது உதவியை பிரதே சபை நாடியுள்ள நிலையில் படையினரின் இந்த முயற்சி ஆழ்ந்த துயரைத் தந்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை அண்மித்த இந்தப்பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அரசின் உதவியுடன் காணிகளை வழங்கி பம்பைமடுப் பகுதியை அழகிய நகராக மாற்ற முயற்சி செய்ய எண்ணினேன்” என்கிறது பிரதேசபை
(எமக்கு கிடைத்த செய்தி உறுதிப்படுத்த முடியவில்லை)
(எமக்கு கிடைத்த செய்தி உறுதிப்படுத்த முடியவில்லை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக